என்ன ஒரு புத்திசாலித்தனம்! ரயிலில் கையோடு ஏர் கூலர் எடுத்து சென்ற நபர் – வைரல் வீடியோ

Viral Video : நீண்ட தூர பயணங்களுக்கு மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். இந்த நிலையில் ரயிலில் பல விசித்திரமான சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ரயில் பயணி ஒருவர் ஸ்லீப்பர் பெட்டியில் ஏர் கூலர் வைத்து தூங்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

என்ன ஒரு புத்திசாலித்தனம்! ரயிலில் கையோடு ஏர் கூலர் எடுத்து சென்ற நபர் - வைரல் வீடியோ

ரயிலில் ஏர் கூலர் வைத்து தூங்கும் இளைஞர்

Published: 

05 Sep 2025 21:44 PM

 IST

தொலைதூர இடங்களுக்கு பயணிப்பவர்களுக்கு ரயில் (Train) பயணம் மிகவும் வசதியாக இருக்கிறது. குறிப்பாக குறைந்த கட்டணத்தில் பயணிக்க முடியும். அதனால் தான் பலர் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். சிலர் தங்கள் வசதிக்கு ஏற்ப ஏசி ஸ்லீப்பரில் பயணம் செய்கிறார்கள், அதே நேரத்தில் சாமானிய மக்கள் பெரும்பாலும் ஏசி அல்லாத மற்றும் பொது பெட்டிகளில் பயணம் செய்கிறார்கள். எனவே ஏசி இல்லாத பயணத்தில் பயணித்த ஒரு பயணி ஒரு அற்புதமான யோசனையைக் கொண்டு வந்தார்.  இது தொடர்பாக வைரலான வீடியோவில் ஒரு பயணி ஏர் கூலருடன் பயணிக்கிறார்.

வைரலாகும் வீடியோவில் ரயில் பெட்டியில் கூட்டம் அதிகம் இருக்கிறது. இதனால் மக்கள் நெரிசலில் அவதிப்பட்டனர்.  வெயில் நேரம் என்பதால் வெப்ப நிலையும் அதிகம் இருந்தது. ஆனால் ஒரு இளைஞர் எந்த கவலையும் இல்லாமல் ஏர் கூலர் வைத்து மகிழ்ச்சியாக தூங்குகிறார். பலரும் அந்த இளைஞரின் யோசனையை பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிக்க : Drone மூலம் டெலிவரி செய்யப்பட்ட ஸ்நாக்ஸ்.. அசத்திய வால்மார்ட்.. ஆச்சர்யத்தில் வாடிக்கையாளர்!

ஏர் கூலருடன் மகிழ்ச்சியாக தூங்கும் இளைஞர்

இளைஞர் ஒருவர் இதுவரை யாரும் செய்திடாத ஒரு வேலையை செய்கிறார். ரயிலில் ஏறும் ஒரு இளைஞர் மேல் பெர்த்தில் ஒரு சிறிய கூலரை வைத்து, அதை சார்ஜிங் சாக்கெட்டில் மாட்டி ஆன் செய்கிறார். பின்னர் தனது சட்டையை கழற்றி ஒரு ஓரமாக வைத்து விட்டு, இந்த உலகுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது போல நிம்மதியாக படுத்து தூங்குகிறார். அருகில் இருந்த மற்றொரு பயணி இந்த வீடியோவை தனது போனில் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் வீடியோ

 

இதையும் படிக்க : ரயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தில் ரீல்ஸ் எடுத்த இளைஞர்கள் – என்ன நடந்தது தெரியுமா?

இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் வேடிக்கையாக எதிர்வினையாற்றி வருகின்றனர். இந்த யோசனை எங்களுக்கு ஏன் வரவில்லை என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். மேலும் இன்னொருவர் நீங்கள் சாதாரண ஸ்லீப்பர் கோச்சை ஏசி கோச்சாக மாற்றிவிட்டீர்கள். இந்த விஷயத்தில் நீங்கள் தான் என் குரு என பாராட்டியிருக்கிறார். மற்ற பயணிகள் அவதிப்படும்போது இவர் மட்டும் நிம்மதியாக தூங்குகிறார், இது போன்று விதி மீறலில் ஈடுபடுவபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது பெரிய அபராதம் விதிக்க வேண்டும். அப்போது தான் மற்றவர்கள் ரயில்வே விதிகளை மீற மாட்டார்கள் என்று மற்றொருவர் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.