Viral Video : பயணியை மது வாங்கிவர கூறிய ஊபர் ஆட்டோ ஓட்டுநர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Uber Auto Driver Asked Passenger To Buy Alcohol | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல விதமான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், ஊபர் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பயணியை மது வாங்கி வர கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இணையத்தில் வைரலாகும் வீடியோ
சமூக ஊடகங்களின் உதவியால் நம்மை சுற்றி நடைபெறும் முக்கிய மற்றும் சுவாரஸ்ய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். இந்த வீடியோக்களில் சில ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் விதமாகவும், சில அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கும். அந்த வகையில், ஊபர் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் வண்டியை பாதியிலேயே நிறுத்திவிட்டு, பயணியை மது வாங்கி வரும்படி கூறிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வைரல் வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆட்டோவை நிறுத்தி மது வாங்கி தர சொன்ன ஊபர் டிரைவர்
இந்தியாவில் ஓலா, ஊபர் உள்ளிட்ட போக்குவரத்து செயலிகளை ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். இருக்கும் இடத்திற்கே கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்களை வரவழைத்து செல்ல வேண்டிய இடத்திற்கு சரியாக செல்ல, இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக உள்ளதால் பலரும் இதனை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், ஊபர் ஆட்டோ ஓட்டுநர் வண்டியை பாதி பயணத்திலேயே நிறுத்தி, பயணியை மது வாங்கி வர கூறியது தொடர்பான வீடியோ இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : விமான பயணத்திற்கு முன்பு குழந்தையின் தந்தை வெளியிட்ட அறிவிப்பு.. வரவேற்பை பெற்ற வீடியோ!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் பேசும் இளைஞர் ஒருவர், நான் ஊபர் ஆட்டோப்வில் பயணம் செய்துக்கொண்டு இருந்தேன். அந்த ஓட்டுநர் ஆட்டோவை பாதி வழியில் மதுக்கடை வெளியே நிறுத்திவிட்டு, மது வாங்கி வரும்படி கூறினார். நான் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே ஆட்டோ இதற்கு மேல் செல்லாது என அவர் கூறினார் என்று கூறுகிறார். அவர் அதனை கேட்டபோது அந்த ஆட்டோ ஓட்டுநர் தனது முகத்தை மூடிக்கொண்டு ஆட்டோவில் அமர்ந்துள்ளார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : மனைவியின் மருத்துவ செலவுக்காக டெலிவரி ஊழியரான முதியவர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ஆட்டோ ஓட்டுநரின் இந்த செயல் ஏற்க தக்கது அல்லது என ஊபர் நிறுவனம் இளைஞரின் அந்த பதிவில் வருத்தம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து பலரும் கருத்து பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.