Viral Video : ரயில் இருக்கைகளின் கவர்களை கிழித்து எறிந்த இளைஞர்கள்.. இணையத்தில் கடும் கண்டனம்!
Men Rip Off Train Seat Covers For Fun | சமூக ஊடகங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், இளைஞர்கள் இருவர் ரயிலின் இருக்கைகளை கிழித்து எறியும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இணையத்தில் வைரலாகும் வீடியோ
ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களின் உதவியால் இணையத்தில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. இவ்வாறு இணையத்தில் வைரலாகும் வீடியோக்களில் சில குற்ற சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களும் இடம்பெறும். அந்த வகையில், இளைஞர்கள் இருவர் ரயிலின் இருக்கைகள் மீது இருக்கும் கவரை கிழித்து எறியும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரயில் இருக்கைகளின் கவர்களை கிழித்த இளைஞர்கள்
இளைஞர்கள் மத்தியில் சமூக ஊடகங்கள் மீதான மோகம் அதிகமாக உள்ளது. எப்படியாவது அதிக லைக்குகளை பெற வேண்டும் என்பதற்காக மிகவும் ஆபத்தான விஷயங்களை கூட அவர்கள் செய்ய தயங்குவதில்லை. அந்த வகையில், இளைஞர்கள் இருவர் ரயில் இருக்கைகளின் கவர்களை கிழித்து எறியும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வேகமாக வைரலான நிலையில், கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : இதுபோன்ற குப்பையான கடற்கரையை பார்த்ததில்லை.. மகாபலிபுரம் குறித்து வீடியோ வெளியிட்ட வெளிநாட்டவர்!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
How stupid one has to be to do this?
See his smile while his friend is tearing the train seat cover apart. They think they achieved something here.
This goes beyond civic sense. This is a punishable offense. pic.twitter.com/t2Sq1MJtpH
— Tarun Gautam (@TARUNspeakss) May 2, 2026
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இரண்டு இளைஞர்கள் உள்ளனர். ஒரு இளைஞர் சிறித்துக்கொண்டே வீடியோ எடுக்கும் நிலையில், மற்றொரு இளைஞர் காரணமே இல்லாமல் ரயில் இருக்கைகளின் கவர்களை கிழித்து எறிகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : மருத்துவரின் கை உரையை விடாமல் பிடித்துக்கொண்ட பச்சிளம் குழந்தை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், அநாகரிக செயலில் ஈடுபட்ட அந்த இளைஞர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.