Viral Video : உணவகத்தில் பிளேட்டுகளை நொறுக்கி நடனமாடிய ரோபோட்.. ஷாக் வீடியோ!

Robot Smashed Plates and Started Dancing | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல விதமான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், உணவகம் ஒன்றில் ரோபோட் ஒன்று பிளேட்டுகளை உடைத்து நடனமாடும் வீடியோ ஒன்று வெளியாகி பேசுபொருளாக மாறியுள்ளது.

Viral Video : உணவகத்தில் பிளேட்டுகளை நொறுக்கி நடனமாடிய ரோபோட்.. ஷாக் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

Published: 

17 Mar 2026 18:18 PM

 IST

ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களின் உதியால் உலகில் நம்மை சுற்றி நடைபெறும் வித்தியாசமான மற்றும் சுவாரஸ்யமான சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், உணவகம் ஒன்றில் ரோபோட் ஒன்று டேபிள் மீது இருந்த பிளேட்டுகளை நொறுக்கி, பிறகு நடனமாடும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில்  வைரலாகி வரும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

உணவகத்தில் பிளேட்டுகளை நொறுக்கி நடனமாடிய ரோபோட்

தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப புதிய புதிய கண்டுபிடிப்புகளும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சமீப காலமாக உணவகங்கள் ரோபோக்களை பணி அமர்ந்த்துவது ஒரு வழக்கமாக இருந்து வருகிறது. வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாகவும், பணியாளர்களை குறைத்து ரோபோக்களை பணி அமர்த்தும் விதமாகவும் பல உணவக நிறுவனங்கள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், ரோபோ ஒன்று டேபிள் மீது இருந்த பிளேட்டுகளை உடைத்துவிட்டு நடனமாடும் வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : பட்டர் சிக்கன் மசாலாவில் ஐஸ் கிரீம் செய்த இளம் பெண்.. வைரலாகும் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் டேபிள் மீது வைக்கப்பட்டுள்ள பிளேட்டுகளை ரோபோட் ஒன்று உடைக்கிறது. அதனை பார்த்ததும் அங்கிருக்கும் பெண் ஒருவர் ஓடி வந்த அந்த ரோபோட்டை தடுக்கிறார். உடனே அந்த ரோபோட் நடனமாட தொடங்குகிறது. அந்த பெண்ணால் ரொபோட்டை கட்டுப்படுத்த முடியாத நிலையில், சக ஊழியர்கள் அங்கு வந்து ரோபோட்டை தடுக்க முயற்சி செய்கின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : மெக்சிகோ கடற்கரையில் கரை ஒதுங்கிய இரட்டை டூம்ஸ்டே மீன்கள்.. பேரழிவின் அறிகுறியா?

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், பலரும் ஆச்சர்யத்துடனும், அதிர்ச்சியுடனும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Follow Us
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்