Viral Video : ரூல்ஸ்னா ரூல்ஸ் தான்.. வாகன ஓட்டியை அலறவிட்ட மூதாட்டி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Old Woman Stopped Scooter Rider | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வரும். அந்த வகையில், நடைபாதையில் ஸ்கூட்டர் ஓட்டி வந்த நபரை மூதாட்டி ஒருவர் தடுத்து நிறுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ
இந்தியாவில் என்னதான் சாலை விதிகள் மிக கடுமையாக இருந்தாலும், அந்த விதிகளை மீறி வாகனம் ஓட்டுவது பலரது வழக்கமாக உள்ளது. இதனை பலர் கண்டும் காணாமல் சென்றாலும், சிலர் அதனை எதிர்த்து கேள்வி கேட்பது உண்டு. இவ்வாறு சாலை விதிகளை மீறி செயல்படுவது தொடர்பான வீடியோக்கள் மற்றும் அத்தகைய செயல்களை தட்டிக் கேட்பது தொடர்பான வீடியோக்கள் பல இணையத்தில் வைரலாகி வரும். அந்த வகையில், நடைபாதையில் இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற ஒருவரை மூதாட்டி ஒருவர் தடுத்து நிறுத்தியது தொடர்பான வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
சாலை விதிகளை மீறிய வாகன ஓட்டி – தடுத்து நிறுத்திய பெண்
கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியில் பிரபாவதி என்ற 73 வயது பெண் ஒருவர் நடந்துச் சென்றுள்ளார். சாலைகளின் ஓரம் போடப்பட்டுள்ள நடைபாதையில் அவர் நடந்துச் சென்ற நிலையில், அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் ஒருவர் வந்துள்ளார். நடைபாதையில் வாகனங்களை ஓட்டுவது சாலை விதிகளுக்கு புறம்பானது என்பதால் பிரபாவதி அந்த இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நடைபாதையில் செல்ல விடாமல் சாலையில் செல்ல வைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : ரயிலில் சான்வெட்ச் செய்த குடும்பம்.. இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் பிரபாவதி சாலையோரத்தில் உள்ள நடைபாதையில் நடந்துச் செல்கிறார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் ஒருவர் வருகிறார். அவரை பாதியிலேயே நிறுத்திய மூதாட்டி, அந்த நபரை திரும்பி போக கூறுகிறார். ஆனால், அந்த நபர் அதே பாதையில் செல்ல முயற்சி செய்கிறார். உடனடியாக தனது பையில் இருந்து செல்போனை எடுத்த மூதாட்டி அந்த நபரை வீடியோ எடுக்க முயற்சி செய்கிறார். அதனை பார்த்ததும் அந்த நபர் சற்று தயங்குகிறார். பிறகு முதாட்டி பாதையை மறைத்தபடி நின்றுக்கொண்டு அந்த நபரை திரும்பி செல்லும்படி கூறுகிறார். அந்த நபரும் வேறு வழியின்றி திரும்பி செல்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.