Viral Video : கொளுத்தும் வெயில்.. தெருநாய்களுக்கு கடையில் அடைக்கலம் கொடுத்த நபர்.. வைரல் வீடியோ!
Man Gave Shelter To Stray Dogs | சமூக ஊடகங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தெரு நாய்களை பாதுகாக்க கடைக்காரர் ஒருவர் தெரு நாய்களுக்கு தனது கடையில் அடைக்கலம் கொடுத்துள்ளார்.

இணையத்தில் வைரலாகும் வீடியோ
சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைராலகும். அவ்வாறு இணையத்தில் வெளியாகும் சில வீடியோக்கள், நம்மை சுற்றி நடைபெறும் சில அற்புதமான சம்பவங்களை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டும். அந்த வகையில், கடைக்காரர் ஒருவர் வெயிலில் இருந்து தெரு நாய்களை பாதுகாக்க, தனது கடைக்குள் தெருநாய்கள் பாதுகாப்பாக இருக்க வழிவகை செய்துள்ளார். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.
வெயிலில் நாய்களுக்கு அடைக்கலம் கொடுத்த கடைக்காரர்
தற்போதைய நிலவரப்படி இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெயிலின் தாக்கம் மிக கடுமையாக உள்ளது. கொளுத்தும் வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் உள்ளனர். ஆனால், ஆதவற்று சாலைகளில் திரியும் தெரு நாய்களின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. அதுவும் நகரங்களில் உள்ள தெரு நாய்கள் வெயிலுக்கு ஒதுங்க கூட இடம் இல்லாமல் தவிக்கின்றன. இந்த நிலையில் தான் கடைக்காரர் ஒருவர் தெரு நாய்களுக்கு இரக்கம் காட்டும் அற்புதமான செயலை செய்துள்ளார். தற்போது அதுதான் இணையத்தில் பேசுபொருளாக உள்ளது.
இதையும் படிங்க : Viral Video : கேதார்நாத் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்.. கூட்ட நெரிசலால் தள்ளுமுள்ளு!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் கடை ஒன்றில் தெரு நாய்கள் அமர்ந்துக்கொண்டு இருக்கின்றன. அவை எந்த வித பயமும் இன்றி அந்த கடையில் வெயிலுக்கு இதமாக அமர்ந்துக்கொண்டு இருக்கின்றன. சில நாய்கள் தரையில் அமர்ந்துள்ள நிலையில், சில நாய்கள் டேபிள் மீது ஏறி படுத்துக்கொண்டு இருக்கின்றன. அந்த கடையில் பணியாற்றும் நபர்களும் நாய்கள் அங்கிருப்பது குறித்து எந்த வித அதிருப்தியும் இல்லாமல் உள்ளனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : ஐஐடி பாம்பேவில் No Bag Day.. வித்தியாசமான யோசனைகள் உடன் வந்த மாணவர்கள்.. வைரல் வீடியோ!
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அந்த கடைக்காரருக்கு பாராட்டு தெரிவித்து கருத்து பகிர்ந்து வருகின்றனர்.