Viral Video : பாராசெய்லிங் செய்யும்போது கயிறு அறுந்து விழுந்த நபர்.. பரபரப்பு வீடியோ!

Man Fell Into Sea After Parasailing Rope Cut Off | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், சுற்றுலா பயணி ஒருவர் பாராசெய்லிங் செய்யும்போது கயிறு அறுந்து கடலில் விழும் வீடியோ வைரலாகி வருகிறது.

Viral Video : பாராசெய்லிங் செய்யும்போது கயிறு அறுந்து விழுந்த நபர்.. பரபரப்பு வீடியோ!

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

Updated On: 

31 Mar 2026 22:26 PM

 IST

ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களின் உதவியால் இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது, பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் நாள்தோறும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில், சுற்றுலா பயணி ஒருவர் பாராசெய்லிங் (Parasailing) செய்த நிலையில், கயிறு அறுந்து கடலில் விழுந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பாராசெய்லிங் செய்யும்போது கயிறு அறுந்து விழுந்த நபர்

சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாகவும், சுற்றுலாவை மேம்படுத்தி சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கவும் பல விதமான விளையாட்டுக்கள் இருக்கும். அத்தகைய விளையாட்டுக்களில் ஒன்றுதான் பாராசெய்லிங். கடல் மீது பாராசூட்டில் தொங்கும் விளையாட்டு தான் அது. இந்த நிலையில், அவ்வாறு பாராசெய்லிங் செய்துக்கொண்டு இருந்த நபர் ஒருவர் கயிறு அறுந்து கடலில் விழும் வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : Gen Z இளம் பெண்களுடன் நடனமாடிய செக்யூரிட்டி.. இணையத்தில் டிரெண்டாகும் வீடியோ!

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், சுற்றுலா பயணி ஒருவர் பாராசெய்லிங் செய்துக்கொண்டு இருக்கிறார். அதாவது படகில் கயிறு கட்டி அதன் மூலம் பாராசூட்டில் தொங்கிக்கொண்டு இருக்கிறார். இந்த நிலையில், திடீரென படகையும், அவரையும் இணைந்து கட்டப்பட்டு இருந்த கயிறு துண்டிக்கப்படுகிறது. பிறகு அவர் கடலில் விழுகிறார். அதனை கண்டு படகில் இருப்பவர்கள் கத்துகின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : உணவகத்தில் பிளேட்டுகளை நொறுக்கி நடனமாடிய ரோபோட்.. ஷாக் வீடியோ!

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், இத்தகைய விளையாட்டுக்களை நம்பி பொதுமக்கள் தங்கள் உயிரை பணயம் வைக்க கூடாது என்று பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..