Viral Video : மூதாட்டிக்காக லோகோ பைலட் செய்த செயல்.. இணையத்தை கவர்ந்த வைரல் வீடியோ!
Loco Pilot Kind Action To Elderly Woman | இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், மூதாட்டி ரயில் ஏற லோகோ பைலட் செய்த இறக்கம் மிகுந்த செயல் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ
ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களின் உதவியால் நம்மை சுற்றி நடைபெறும் சுவாரஸ்ய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். இவ்வாறு ஒவ்வொரு நாளும் பல வகையான சுவாரஸ்யமான மற்றும் வியப்பூட்டும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வரும். அந்த வகையில், ரயில் ஏற நடக்க முடியாமல் நடந்து வந்த மூதாட்டிக்காக லோகோ பைலட் ரயிலை மெதுவாக இயக்கி மூதாட்டி ரயிலில் ஏற உதவி செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.
மூதாட்டிக்காக லோகோ பைலட் செய்த வேலை
பேருந்து, ஆட்டோவை போல ரயிலை நினைத்த நேரத்திற்கு, நினைத்த இடத்தில் நிறுத்த முடியாது. காரணம் ரயில்கள் இயங்குவதற்கு சில விதிகள் உள்ளன. அதாவது ரயில் நிலையங்களில் மட்டுமே சில நிமிடங்கள் நின்று செல்லும். இதுதவிர இரண்டு ரயில் நிலையங்களுக்கு நடுவே எல்லாம் ரயிலை நிறுத்த முடியாது. ஆனால், லோகோ பைலட் ஒருவர் முதாட்டிக்காக ரயிலை பாதி வழியில் நிறுத்தி அவரை ரயிலில் ஏற்றிச் சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : மனதில் பாரம்.. தோல்களில் சுமை.. இணையத்தை கலங்க செய்த இளைஞரின் வீடியோ!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் ரயில் ஒன்று ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லத் தொடங்குகிறது. அந்த நேரம் பார்த்து மூதாட்டி ஒருவர் புறப்பட்ட அந்த ரயிலை பிடிப்பதற்காக நடக்க முடியாமல் அவசர அவசரமாக ரயிலை நோக்கிச் செல்கிறார். அதனை கவனித்த லோகோ பைலட், ரயிலை நிறுத்தி மூதாட்டி ரயிலில் ஏற உதவி செய்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : சிறுத்தையுடன் போட்டியிட்ட பிரபல யூடியூபர்.. இணையத்தில் பேசுபொருளான வீடியோ!
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், லோகோ பைலட்டுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து கருத்து பகிர்ந்து வருகின்றனர்.