Viral Video : ராஜநாகத்துக்கு தொப்பி அணிவித்து விளையாடிய நபர்.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!

King Cobra Viral Video | கொடிய விஷம் கொண்ட உயிர் கொல்லி பாம்பாக ராஜநாகம் உள்ளது. இந்த பாம்பு கடித்த ஒருசில நொடிகளிலேயே உயிர் போய்விடும் ஆபாயம் உள்ளது. ராஜநாகத்தின் பெயரை கேட்டால் கூட பலரும் அஞ்சும் நிலையில், இளைஞர் ஒருவர் ராஜநாகத்தின் தலையில் தொப்பி அணிவித்து விளையாடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

Viral Video : ராஜநாகத்துக்கு தொப்பி அணிவித்து விளையாடிய நபர்.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

Updated On: 

01 Jun 2025 17:12 PM

 IST

உலகில் உள்ள ஆபத்தான உயிரினங்களில் ஒன்றாக உள்ளது பாம்பு. பாம்புகளில் பல வகைகள் உள்ள நிலையில், ராஜநாகம் மிகவும் கொடூர விஷ தன்மை கொண்டதாக உள்ளது. ராஜநாஜம் எந்த அளவுக்கு கொடூர விஷம் கொண்டது என்றால், அதன் விஷம் ஒரே நேரத்தில் 20 பேரை கொல்லும் திறன் கொண்டது. இதன் காரணமாக ராஜநாகம் அச்சுறுத்தக்கூடிய உயிர் கொல்லி உயிரினமாக உள்ளது. இத்தகைய கொடூர குணங்களை கொண்டுள்ள ராஜநாகத்திடம் நெருங்குவதற்கே பலருக்கும் பயம் உள்ள நிலையில், இளைஞர் ஒருவர் ராஜநாகத்திற்கு தொப்பி அணிவித்து அழகுபார்த்து விளையாடுகிறார். அது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த வைரல் வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

கொடூர விஷம் கொண்ட ராஜநாகத்திடம் தொப்பி அணிவித்து விளையாடிய நபர்

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பதற்கு ஏற்ப மனிதர்கள் பாம்பின் அருகில் கூட நிற்க விரும்புவதில்லை. ஆனால், இளைஞர் ஒருவர் துளியும் பயம் இல்லாமல் ராஜநாகத்திடம் விளையாடுகிறார். உலகின் மிகவு, விஷ தன்மை வாய்ந்த பாம்புகளில் ஒன்றாக இந்த ராகநாகம் உள்ள நிலையில், அவர் ஏதோ தனது செல்லப்பிராணியுடன் விளையாடுவதை போல அந்த பாம்புடன் கொஞ்சி விளையாடுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், வீடியோவை பார்க்கும் பலரும் ஆச்சர்யத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்ந்து வருகின்றனர்.

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் ராட்ச ராஜநாகம் ஒன்று இருக்கிறது. அந்த ராஜநாகத்தின் தலையில் பியர் கேப் (Bear Cap) என அழைக்கப்படும் சிறிய வகை தொப்பி அணிவிக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் இளைஞர் ஒருவர் அமர்ந்துக்கொண்டு அந்த பாம்பின் தொப்பியை இழுத்து விளையாடுகிறார். திடீரென கோபம் கொள்ளும் அந்த பாம்பு அந்த நபரை தாக்க முயலுகிறது. அவர் அங்கிருந்து அலறி அடித்துக்கொண்டு இரண்டு, மூன்று அடிகள் பின்னால் செல்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஆபத்தான விஷயங்களில் விளையாட்டு தனமாக இருப்பது கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ பார்பதற்கே மிகவும் பயமாக உள்ளது என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.

Follow Us
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..