பெற்றோரிடம் செல்போனில் பேசிய சிறுவன்.. கடுமையாக தாக்கிய பள்ளி ஆசிரியர்.. அதிர்ச்சி வீடியோ!
Karnataka Teacher Assaults Student | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், ஆசிரியர் ஒருவர் 9 வயது பள்ளி மாணவரை தனது பெற்றோரிடம் செல்போனில் பேசியதற்காக மிக கடுமையாக தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ
ஸ்மார்ட்போன்கள் மற்றும் இணையதள உதவியால் உலகில் நம்மை சுற்றில் நடைபெறும் குற்ற சம்பவங்கள் உலகிற்கு ஆதாரத்துடன் தெரிய வருகிறது. இவ்வாறு இணையத்தில் வைரலாகும் வீடியோக்கள் பல குற்ற சம்பவங்களுக்கு ஆதாரமாக இருக்கின்றன. இந்த நிலையில், பெற்றோரிடம் செல்போனில் பேசியதால் சிறுவன் ஒருவரை அவரது பள்ளி தலைமை ஆசிரியர் மிக கடுமையாக தாக்கும் வீடியோ வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சிறுவனை கடுமையாக தாக்கிய பள்ளி ஆசிரியர்
கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா பகுதியில் வேதா பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் சிறுவன் ஒருவர் வேறு ஒரு நபரிடம் தொலைபேசியை வாங்கி தனது பாட்டியிடம் பேசியுள்ளார். இதனால், அந்த பள்ளி ஆசிரியர் மாணவரை மிக கடுமையாக தாக்கியுள்ளார். இந்த சம்பவம் நடைபெற்று சுமார் 8 மாதங்கள் ஆன நிலையில், தற்போது தான் இந்த வீடியோ வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகு அந்த மாணவர் பள்ளி மாற்றப்பட்டுள்ளார். மாணவரை தாக்கிய அந்த ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க : Viral Video : ரயிலில் மீண்டும் கழிவி பயன்படுத்தப்பட்ட Use and Throw கப்புகள்?.. வைரலாகும் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
A teacher has been arrested in #Karnataka for assaulting a student at Shreeguru Thipperudraswamy’s residential Veda school in #Nayakanahatti, #Chitradurga district. pic.twitter.com/Z3711Eq4TO
— Hate Detector 🔍 (@HateDetectors) October 23, 2025
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் ஒரு அறையில் மாணவர்கள் சிலர் தரையில் படுத்துள்ளனர். அப்போது அந்த ஆசிரியரை சிறுவனை அழைத்து விசாரிக்கிறார். பிறகு சிறுவனை கடுமையாக தாக்க தொடங்குகிறார். சிறுவர் சத்தமாக கத்தி அழுதபோதும் அந்த ஆசிரியர் அவரை விடாமல் மிக கடுமையாக தாக்குகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : சாலையோரத்தில் விழுந்த குட்டி யானை.. பதறிப்போன தாய் யானை.. அடுத்து நடந்தது என்ன?
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், அந்த ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.