Viral Video : பாட்டியை விட்டு பிரிய மனமில்லாமல் அழுத Golden Retriever.. உணர்ச்சி பொங்கும் வீடியோ வைரல்!
Golden Retriever Emotional Video | மனிதர்கள் தங்களது அன்புக்குறியவர்கள் மற்றும் உறவுகளை பிரியும்போது மிகுந்த மன வேதனைக்கு உள்ளாகி அழுதுவிடுவர். அந்த வகையில் தனது பாட்டியை பிரிட மனமில்லாமல் கோல்டன் ரிட்ரைவர் நாய் ஒன்று அழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ
பிரிவு என்பது மிகவும் கடினமான ஒன்று. நண்பர்களை பிரிவது, உறவுகளை பிரிவது, பெற்றோரை பிரிவது என வாழ்க்கையின் பயணத்தில் நாம் பல பிரிவுகளை சந்திக்க நேரிடும். பிரிவு இயல்புதான் என்றாலும் அதனை மனது ஏற்றுக்கொள்ள மறுப்பதே மனித இயல்பு. ஆனால், இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் நாய் ஒன்று தனது பாட்டியை பிரிய மனமில்லாமல் அழுகிறது. மனிதர்களையே தாண்டும் அளவுக்கு அந்த நாய் அந்த மூதாட்டி மீது பாசம் கொண்டுள்ளது. இதன் காரணமாக அந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. அப்படி அந்த வீடியோவில் என்னதான் இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பாட்டியை பிரிய மனமில்லாம அழுத கோல்டன் ரிட்ரைவர்
மனிதர்களுக்கு அவர்கள் அதிகம் அன்புக்கொண்டு இருக்கும் நபர்களை பிரிவது மிகவும் கடினமானதாக இருக்கும். எப்போதும் தங்களது உறவுகள் உடனே இருக்க வேண்டும் என அவர்கள் நினைப்பர். ஒருவேளை தங்களது உறவுகளை பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டால் அவர்களால் அதனை தாங்கிக்கொள்ளவே முடியாது. மனிதர்கள் தான் இப்படி என நினைத்தால் தனது பாட்டியை பிரிய மனமில்லாமல் கோல்டன் ரிட்ரைவர் நாய் ஒன்று அழும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : தெரு நாய்களுக்கு பயந்து கூரை மீது ஏறிய மாடு.. தெலங்கானாவில் பரபரப்பு!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
This is Wally. He’s distraught because he had a fun time playing at grandma’s house and has to go home. Tries not to play favorites, but grandma is definitely his. 13/10 pic.twitter.com/uYHcvEO3D3
— WeRateDogs (@dog_rates) September 11, 2025