Viral Video : இந்திய ரயிலில் சிறப்பான உணவு.. வெளிநாட்டு சுற்றுலா பயணி வெளியிட்ட வீடியோ!

Foreign Tourist Experience On Food Delivered In Train | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல விதமான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் இந்திய ரயிலில் வழங்கப்பட்ட உணவு குறித்து பகிர்ந்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

Viral Video : இந்திய ரயிலில் சிறப்பான உணவு.. வெளிநாட்டு சுற்றுலா பயணி வெளியிட்ட வீடியோ!

வைரல் வீடியோ

Updated On: 

20 Feb 2026 16:17 PM

 IST

வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு சுற்றுலா வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறு இந்தியாவுக்கு வரும் அவர்கள் இந்தியாவில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள், தாங்கள் சந்தித்த மனிதர்கள் குறித்து வீடியோ வெளியிடுவர். அந்த வகையில் இந்தியாவுக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் அவருக்கு ரயில் பயணத்தின் போது வழங்கப்பட்ட உணவு குறித்து வீடியோ பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய ரயிலில் சிறப்பான உணவு – வெளிநாட்டு சுற்றுலா பயணி

வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்த சுற்றுலா பயணி ஒருவர் தனது பயணத்தை வீடியோ பதிவு செய்கிறார். அப்போது தான் பயணித்த ரயிலில் அவருக்கு வழங்கப்பட்ட உணவு குறித்து அவர் வீடியோ ஒன்றை பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் ரயிலில் வழங்கப்பட்ட உணவு மிகவும் அருமையாக உள்ளதாக கூறுகிறார். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : ரூல்ஸ்னா ரூல்ஸ் தான்.. வாகன ஓட்டியை அலறவிட்ட மூதாட்டி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில் வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் ரயிலில் தனக்கு வழங்கப்பட்ட உணவு குறித்து ஆர்வமாக பேசுகிறார். முதலில் தனக்கு வழங்கப்பட்ட உணவில் என்ன என்ன இருக்கிறது என்பதை அவர் பிரித்து பார்க்கிறார். பிறகு அவற்றை ஒவ்வொன்றாக சுவைத்து பார்க்கிறார். அவற்றின் சுசை அவருக்கு மிகவும் பிடித்துப்போக அந்த உணவு வகைகள் அனைத்தும் சிறப்பாக உள்ளதாக கூறுகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : திடீரென இடிந்து உள்ளே வாங்கிய ஷாங்காய் சாலை.. அதிர்ச்சியூட்டும் வீடியோ!

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. இந்திய ரயில் உணவுகளின் மீது தவறான பிம்பம் உள்ளது. எனக்கு வழங்கப்பட்ட உணவு மிகவும் அருமையாக இருந்தது என்று அவர் கூறியுள்ளார்.

Related Stories
அச்சு அசல் மனிதர்களை போலவே ஸ்டண்ட், நடனம் செய்த ரோபோக்கள்!
Viral Video : சாலையில் செல்லும் வாகனங்களில் கதவுகளை திறந்துவிட்ட இளைஞர்.. உடனடி ஆக்‌ஷன் எடுத்த போலீஸ்!
Viral Video : வீடற்ற சிறுவர்களுக்கு சாலையோரத்தில் கல்வி கற்றுக்கொடுக்கும் நபர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Viral Video : திருமண நிகழ்ச்சியில் மணமகளின் பையை திருடிச் சென்ற நபர்.. ரூ.4 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி கொள்ளை.. வைரல் வீடியோ!
Viral Video : வெறும் 5 பேருக்கு ஹோட்டல்.. 70 வயதிலும் அயராத உழைப்பு.. இணையத்தை திரும்பி பார்க்க வைத்த மூதாட்டி!
Viral Video : ரூல்ஸ்னா ரூல்ஸ் தான்.. வாகன ஓட்டியை அலறவிட்ட மூதாட்டி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
வந்தே பாரத் மற்றும் அம்ரித் பாரத் ரயில்களில் Emergency Quota .. எத்தனை சீட்கள் ஒதுக்கப்படும்?
மணமகளின் பையை திருடிச் சென்ற நபர்.. ரூ.4 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி கொள்ளை..
சந்தேகத்தின் பெயரில் காதலியை கொலைசெய்த காதலன்
ஏப்.30 வரை "ஜனநாயகன்" வெளியாக வாய்ப்பில்லை - ரசிகர்கள் அதிர்ச்சி!