Viral Video : இதுபோன்ற குப்பையான கடற்கரையை பார்த்ததில்லை.. மகாபலிபுரம் குறித்து வீடியோ வெளியிட்ட வெளிநாட்டவர்!

Foreign Tourist Released Video On Mahabalipuram Trash | சமூக ஊடகங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில், வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரை குப்பையாக உள்ளது குறித்து வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

Viral Video : இதுபோன்ற குப்பையான கடற்கரையை பார்த்ததில்லை.. மகாபலிபுரம் குறித்து வீடியோ வெளியிட்ட வெளிநாட்டவர்!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

Updated On: 

27 Apr 2026 22:32 PM

 IST

சமூக ஊடகங்களில் நாள்தோறு  ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோக்களில் சில சுவாரஸ்யமாகவும், பொழுதுபோக்காகவும் இருக்கும். ஆனால், சில வீடியோக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், சமுதாயத்திற்கு கருத்துள்ளதாகவும் இருக்கும். அந்த வகையில், சென்னை மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரையில் குப்பை தேங்கியுள்ளது குறித்து வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் வீடியோ பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

மகாபலிபுரம் குறித்து வீடியோ வெளியிட்ட சுற்றுலா பயணி

வெளிநாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் இந்தியாவுக்கு சுற்றுலா வருகின்றனர். அவ்வாறு சுற்றுலா வரும் அவர்கள், இந்தியாவில் தாங்கள் சந்திக்கும் சிக்கல்கள், நல்ல விஷயங்கள்
ஆகிவற்றை குறித்து வீடியோ பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில், வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் மகாபலிபுரம் கடற்கரை குறித்து வெளியிட்டுள்ள வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Viral Video : இந்திய நகரங்களில் பாதுகாப்பு.. மதிப்பெண் வழங்கிய ரஷ்ய பெண்.. வைரல் வீடியோ!

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் பேசும் வெளிநாட்டு சுற்றுலா பயணி, இதுதான் நான் இதுவரை பார்த்த அதிக குப்பை மிகுந்த கடற்கரை. இது இந்த நாட்டில் வாழும் மக்களுக்கு அவமானம். இங்கு இருக்கும் மனிதர்கள் தாங்கள் போடும் குப்பைகளை எடுப்பதில்லை ஆனால், நாம் கல்வியை குறை கூறுகிறோம். அவர்கள் இது அரசாங்கத்தின் கடமை என நினைக்கின்றனர். இதன் காரணமாக தான் அவர்கள் இந்த குப்பைகளை எடுப்பதில்லை என்று கூறியுள்ளார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : கொசு வலை போட்டுக்கொண்டு காவல் காக்கும் காவலாளி.. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Follow Us
சிஇடி தேர்வு எழுத வந்த மாணவிகளின் மூக்குத்தியை அகற்ற சொன்னதால் பரபரப்பு
ஈரானில் அரசியல் அமைப்பில் திடீர் மாற்றங்கள் - என்ன காரணம்?
வெள்ளி விலை சரிவு, தங்கம் மற்றும் எண்ணெய் விலை உயர்வு
அதிக காய்கறி பழங்கள் சாப்பிட்டால் புற்றுநோய் அபாயமா? புதிய ஆய்வு சொல்வது என்ன?