கத்தியைத் தீட்டிய நபர்…. பயந்து கூண்டுக்குள் ஒளிந்துகொண்ட நாய் – வைரலாகும் வீடியோ

Viral Video : சமீப காலமாக நாய் தொடர்பான வீடியோக்களும் செய்திகளும் மக்களிடையே கவலையை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்த நிலையில் சமீபத்தில் வைரலான இந்த வீடியோ நாய்கள் மீது உங்களுக்கு பரிதாபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அந்த வீடியோ குறித்து இந்த கட்டுரையில் விவரமாக பார்க்கலாம்.

கத்தியைத் தீட்டிய நபர்....  பயந்து கூண்டுக்குள் ஒளிந்துகொண்ட நாய்  -  வைரலாகும் வீடியோ

வைரல் வீடியோ

Published: 

12 Sep 2025 22:25 PM

 IST

மனிதர்களாக இருந்தாலும் சரி, விலங்குகளாக இருந்தாலும் சரி, அனைவருக்கும் பயம் என்பது பொதுவான உணவர்வு தான். ஒருவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், அவர் பயப்படுவது இயற்கையானது. காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்கள் கூட பயப்படும் வீடியோக்களை பார்த்திருப்போம். சிறிய விலங்குகளுக்கு அவை பயப்படாவிட்டாலும், யானைகள் அல்லது காண்டாமிருகங்கள் போன்ற பெரிய விலங்குகளைப் பார்த்து அவை பயம்கொள்கின்றன. அத்தகைய சூழ்நிலையில், நாய்கள் (Dog) என்ன செய்ய முடியும். சமீப காலமாக நாய் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.  பல வீடியோக்கள் நாய்கள் மீது நமக்கு கோபத்தை வரவழைத்தாலும், இந்த வீடியோ நாய் மீது பரிதாபம் ஏற்பட வைக்கிறது.

கத்தியை தீட்டுவைதைப் பார்த்து பயந்து ஓடும் நாய்

ஒரு நாய், அதன் உரிமையாளர் கத்தியைக் கூர்மைப்படுத்துவதைப் பார்த்த பிறகு நாயின் பயம் கொள்கிறது, அது பயந்து ஓடிப்போய் கூண்டில் தன்னைத்தானே பூட்டிக் கொள்கிறது, இதனால் உரிமையாளர் தனக்கு தீங்கு விளைவிக்க முடியாது. வீடியோவில், ஒருவர் கத்தியை மிகவும் ஆக்ரோஷமாக கூர்மையாக தீட்டுவதையும், ஒரு நாயும் வாத்தும் அந்த நபர் முன் வசதியாக அமர்ந்து வேடிக்கை பார்ப்பதை பார்க்க முடியும்.  சில வினாடிகளுக்குப் பிறகு, வாத்து அமைதியாக அதன் இடத்தில் அமர்ந்திருக்கிறது, ஆனால் நாய், உரிமையாளர் தன்னைக் கொல்ல ஆயுதத்தைக் கூர்மையாக்குகிறார் என்று நினைத்து விட்டது போல, தன்னைக் காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து ஓடிப்போய் கூண்டுக்குள் ஒளிந்துகொள்கிறது.

இதையும் படிக்க : பாடல் பாடிய பாதுகாவலர்.. கட்டி அணைத்தபடி மெய் மறந்து கேட்ட யானை.. வைரல் வீடியோ!

இந்த வீடியோவை சமூக ஊடக தளமான X  பக்கத்தில் @DishaRajput24 என்ற ஐடியிலிருந்து பகிரப்பட்டுள்ளது, மேலும் இந்த வீடியோ நகைப்புக்குரியதாக இருந்தாலும் நாயை இப்படி கத்தியை காட்டி பயமுறுத்துவது ஆபத்தானது எனவும் நாய் கோபத்தில் தாக்கக் கூடும் எனவும் பலரும் எச்சரித்து வருகின்றனர்.

வைரலாகும் வீடியோ

 

இதையும் படிக்க : பட்டு உடையுடன் ஓணம் கொண்டாடிய நாய் குட்டி.. இணையத்தில் வைரலாகும் கியூட் வீடியோ!

24 வினாடிகள் மட்டுமே கொண்ட இந்த வீடியோ இதுவரை 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர், அதே நேரத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வீடியோவை லைக் செய்ததுடன் பல வேடிக்கையான முறையில் கமெண்ட் செய்து வருகின்றனர். அதில் மற்றொரு பயனர், ‘பாவம் நாய் பயத்தில் ஓடிவிட்டது, இல்லையென்றால் என்ன நடக்கும் என அதற்கு நன்றாகவே தெரியும் என குறிப்பிட்டுள்ளார். இதேபோல், மற்றொருவர் பயத்தில் நாய் தன்னை பாதுகாத்துக்கொள்ள என்ன செய்யும் என்பதை இந்த வீடியோ காட்டிவட்டது என குறிப்பிட்டுள்ளார்.