நிலநடுக்கமே வந்தாலும் பரவால்ல… நமக்கு சோறு முக்கியம் – வைரலாகும் சிறுவனின் வீடியோ

Earthquake Won’t Stop Hunger : சீனாவின் கிங்யுவான் பகுதியில் 4.9 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தின்போது ஒரு சிறுவன் கூலாக சாப்பிடும் வீடியோ சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், குடும்பத்தினர் நிலநடுக்கத்தால் அலறி ஓடிக்கொண்டிருக்கும் தருணத்தில், அந்த சிறுவன் மட்டும் திடீரென மீண்டும் டேபிளுக்கு ஓடி சென்று தொடர்ந்து சாப்பிடுகிறான்.

நிலநடுக்கமே வந்தாலும் பரவால்ல... நமக்கு சோறு முக்கியம் - வைரலாகும் சிறுவனின் வீடியோ

நில நடுக்கத்தின்போது கூலாக சாப்பிடும் சிறுவன்

Published: 

28 Jun 2025 21:08 PM

 IST

சீனாவின் (China) தெற்குப் பகுதியில் உள்ள குயின்யுவான் நகரில் 2025,  ஜூன் 23 ஆம் தேதி ஏற்பட்ட 4.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் (Earthquake) போது ஒரு சிறுவன் செய்த செயல் தற்போது சமூக வலைதளங்களில் (Social Media) வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், தந்தை மற்றும் இரண்டு குழந்தைகள் சேர்ந்து டேபிளில் அமர்ந்து உணவு சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றனர். அப்போது சில வினாடிகள் கழித்து நிலநடுக்கம் ஏற்படுகிறது. அதற்குப் பிறகு தந்தை, மற்றும் அவருடைய இளைய மகனுடன் கதவை நோக்கி செல்கிறார். பெரிய மகனும் முதலில் தந்தையைப் பின்தொடர்கிறார். ஆனால் சில வினாடிகளில், உணவை  விட்டு செல்ல மனமில்லாமல் திரும்பி வந்து மேசையில் உள்ள உணவை எடுத்துச் சாப்பிடத் தொடங்குகிறார். அவருக்கு இருந்த பசியின் காரணமாக அவர் இவ்வாறு செய்திருக்கிறார்.

அப்போது தந்தை பதற்றத்துடன் “ஓடு… ஓடு” எனக் கத்தினாலும், சிறுவன் அதை கண்டுகொள்ளாமல் கை நிறைய உணவை விழுங்க முயலுகிறான். மேலும் ஒரு பாட்டிலையும் கைபற்றவும் முயற்சிக்கிறான். இதைக் கண்டு தந்தை நேரில் வந்து, அந்த பாட்டிலையும் அவனிடம் வைத்து விட்டு விலகச் சொல்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நிலநடுக்கத்தின் போது கூலாக சாப்பிடும் சிறுவனின் வீடியோ

 

இது தொடர்பாக தந்தை பின்னர் ஊடகங்களுக்கு பேட்டியளிக்கும்போது கூறியதாவது, “அந்த நேரத்தில் நான் மிகவும் பதற்றமாக இருந்தேன். பையனை ஓடச் சொல்லிக்கொண்டே இருந்தேன். அவனுக்கு இயற்கையாகவே காமெடி ஜீன் உள்ளது. வீடியோவை பின்னர் பார்த்தபோது தான் அது எப்படி நகைச்சுவையாக இருந்தது என்று புரிந்தது.” என்று தனது மகனின் செயலை பாராட்டினார்.  மேலும் பேசிய அவர், “அந்த உணவு அவனுக்கு பிடித்தது அல்ல. ஆனால் அவன் நன்றாக சாப்பிடுவான் என்பதை அனைவருக்கும் காட்டுவதற்காக அப்படி நடந்துகொண்டான். என்றார்.

தந்தை பின் தனது மகனைப் பார்த்து அறிவுரையாக,  “முதலில் உயிர் முக்கியம், பாதுகாப்பு முக்கியம். பொருள்களை பற்றி சிந்திக்க வேண்டாம். நிலநடுக்கம் ஏற்பட்டால் முதலில் ஓடிச் சென்று, உயிரைப் பாதுகாக்க வேண்டும். என்றார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு, பலரும் அதைப் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.

நெட்டிசன்களின் சில கமெண்ட்கள்:

இந்த வீடியோ வைரலாகும் நிலையில் நெட்டிசன்கள் காமெடியாக கமெண்ட் செய்துள்ளனர். அதில், முதலில் சாப்பாடு பின்னர் தான் உயிர் என ஒருவர் தெரிவித்திருக்கிறார். மற்றொருவர் இது நல்ல காமெடி, அப்பா பததட்டத்துடன் ஓடுகிறார். ஆனால் அண்ணனுக்கு மட்டும் சாப்பாடு முக்கியமாக இருக்கிறது. எல்லா குடும்பத்திலும் இப்படி ஒருவர் இருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர் நில நடுக்கமே இருந்தாலும் சோறு முக்கியம் என கமெண்ட் செய்துள்ளார்.

அதிகரித்து வரும் தங்க குத்தகை.. என்ன காரணம்?
மக்களை காக்கும் வவ்வால்கள் - கிராம மக்களின் விசித்திர நம்பிக்கை
உங்கள் அறையின் ஓரத்தில் நிற்பது பேயல்ல. அது ஸ்லீப் பேரலிசிஸ்!
ஏலியனுடன் தொடர்பில் இருந்த ஜார்ஜ் புஷ்? அமேசான் பிரைம் ஆவண படத்தால் சர்ச்சை