மெட்ரோ தண்டவாளத்தில் விழுந்த பாதுகாவலர் …. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

Viral Video : பெங்களூருவில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் பாதுகாவலர் ஒருவர் தண்டவாளத்தில் தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மெட்ரோ பணியாளர் மின்சாரத்தை துண்டித்த நிலையில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மெட்ரோ தண்டவாளத்தில் விழுந்த பாதுகாவலர் .... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்த பாதுகாவலர்

Published: 

26 Aug 2025 22:19 PM

சாதாரண ரயில் தண்டவாளங்களை விட மெட்ரோ (Metro) தண்டவாளங்கள் மிகவும்  ஆபத்தானது. காரணம் மெட்ரோ ரயில் தண்டவாளங்களில் எப்போதும் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும். இதுபோன்ற சூழ்நிலைகளில் உடனடியாக உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.  இந்த நிலையில் அதிர்ச்சி சம்பவம் பெங்களூரு  (Bengaluru) மெட்ரோ ரயில் நிலையத்தில் நடந்திருக்கிறது. அங்கு பணியில் இருந்த பாதுகாவலர் ஒருவர் தவறுதலாக மெட்ரோ தண்டவாளத்தில் விழுந்தார். நல்வாய்ப்பாக அந்த நேரத்தில் அங்கு மெட்ரோ ரயில் வரவில்லை. இந்த நிலையில் அங்கு இருந்த மற்றொருவர் உடனடியாக பாதுகாவலரை காப்பாற்றி, நடைமேடையில் தூக்கிவிட்டார்.  இந்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.

தண்டவாளத்தில் விழுந்த பாதுகாவலர்

பெங்களூருவில் உள்ள ராகிகுடா மெட்ரோ ரயில் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் 25, 2025 அன்று காலை 11 மணியளவில் ஒரு பாதுகாவலர் பணியில் இருந்தார். இந்த நிலையில் அவர் நடைமேடையில் நடந்தபடி இருந்தார். இந்த நிலையில் அவர் சோர்வாக இருந்தததாக தெரிகிறது. நடைமேடை ஓரம் நடந்து வரும்போது எதிர்பாராதவிதமாக தண்டவாளத்தில் விழுந்தார். உடனடியாக சுதாரித்துக்கொண்டு மீண்டும் மேடையில் ஏற முயன்றார். அப்போது அங்கிருந்த பயணி ஒருவர் அவரைக் கைகொடுத்து தூக்கி விட்டார்.

இதையும் படிக்க : இந்தி தெரியும் போடா’ பயணிகளின் கவனத்தை பெற்ற தமிழக விமானி.. வைரல் வீடியோ!

வைரலாகும் வீடியோ

 

இதனால் அவர் உயிர் பிழைத்தார். அவருக்கு ஏற்பட இருந்த பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அங்கு ரயில் வராததால் அவருக்கு உயிர் சேதம் ஏற்படவில்லை. பாதுகாவலர் சோர்வில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க : டெலிவரிக்கு சென்ற வீட்டில் மழையில் நனைந்த துணிகள்.. எடுத்து மடித்து வைத்த போஸ்ட்மேன்!

மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் பாதிப்பு தவிர்ப்பு

அப்போது பிளாட்ஃபார்ம் நம்பர் 1 இல் இருந்த மற்றொரு பாதுகாவலர் உடனடியாக அவசர கால டிரிப் சுவிட்சை செயல்படுத்தினார். இதன் காரணமாக தண்டவாளத்தில் மின்சாரம் நிறுத்தப்பட்டது சம்பவத்தின் போது ரயில் நிலையத்துக்கு வரவிருந்த ரயில் நிறுத்தப்பட்து. பாதுகாப்புக்காக சுமார் 6 தண்டவாளங்களில் இருந்து மின்சாரம் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாதுகாவலர் உயிருக்கு பாதிப்பு ஏற்படவில்லை. தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.