வங்கி கணக்கிற்கு தவறாக வந்த ரூ.50,000 – தேர்வில் 97% பெற்ற மாணவி – என்ன நடந்தது தெரியுமா?
Wrong transfer helps girl : பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் தன்னுடைய வங்கிக் கணக்கில் தவறுதலாக வந்த 50,000 ரூபாயை அதன் உண்மையான உரிமையாளரிடம் திருப்பி அளிக்க முயற்சி செய்ய, அது ஒரு மாணவியின் வாழ்க்கையே மாற்றப்பட்டது. இந்த சம்பம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மாதிரி புகைப்படம்
பெங்களூருவைச் (Bengaluru) சேர்ந்த தொழிலதிபர் சின்மய் ஹெக்டே தனது வங்கி கணக்கில் (Bank Account), சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன், எதிர்பாராதவிதமாக ரூ.50,000 என்ற தொகை வந்திருக்கிறது. இந்த தொகை சவூதி அரேபியாவில் (Saudi Arabia) உள்ள ரிஸ்வான் என்ற நபரிடமிருந்து தவறாக அவரது கணக்கிற்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இதற்கான காரணம், ரிஸ்வான் வேறு ஒரு அக்கவுண்ட் நம்பருக்கு பதிலாக தவறாக சின்மய் அக்கவுண்ட் நம்பரை குறிப்பிட்டிருக்கிறார். இந்த விவகாரம் குறித்து சந்தேகமடைந்த சின்மய் வங்கிக்கு நேரில் சென்று விசாரித்தபோது, அந்த பணம் ரிஸ்வான் என்பவருக்குச் சொந்தமானது என்று உறுதி செய்யப்பட்டது. ரிஸ்வானை தொலைபேசியில் தொடர்புகொண்ட சின்மய், அவரிடம் நடந்ததைக் குறிப்பிட்டிருக்கிறார். இதனை கேட்ட ரிஸ்வான் ‘அந்த பணம் என் குடும்பத்துக்காக நான் அனுப்பினேன். தயவுசெய்து அதை திருப்பிக்கொடுத்துவிடுங்கள் என்று அழுதிருக்கிறார். அவரை சமதானப்படுத்திய சின்மய் அவருக்கு பணத்தை திருப்பி தருவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்.
இதனையடுத்து ரிஸ்வானின் குடும்பத்திற்கு பணத்தை நேரில் வழங்குவதற்காக சின்மய் சென்றிருக்கிறார். அங்கே சென்றபோது, ரிஸ்வானின் வீடு மிகவும் சாதாரணமாக இருந்திருக்கிறது. ரிஸ்வானின் தந்தை ஒரு கட்டடத்தில் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்தது கால் பகுதி பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் வீல் சேரில் முடங்கும் நிலை அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. விசாரித்தபோது பி.காம் டிகிரி முடித்துள்ள ரிஸ்வான் 92% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கிறார். தனது குடும்பத்தைக் காப்பாற்ற வேலைக்காக வெளிநாட்டிற்கு சென்றிருக்கிறார்.
பாராட்டுக்களை குவிக்கும் தொழிலதிபரின் செயல்
Two years ago, I received ₹50,000 from an international account. I wasn’t expecting any money, so I went to the bank to check. It turned out the transfer was from a man named Rizwan, working in Saudi. Due to a small error in the account number, the money had landed in my…
— Chinmay Hegde (@Chinmay16206171) May 2, 2025
ரிஸ்வானின் தங்கை ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தாலும், குடும்ப நிலை காரணமாக அரசு பள்ளிக்கு மாற வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இதைக் கேட்ட சின்மய் அடுத்த நாளே மீண்டும் ரிஸ்வானின் குடும்பத்தை நேரில் சென்று சந்தித்து, நான் உங்கள் மகளின் கல்வி செலவை முழுமையான ஏற்கிறேன். அவள் தனியார் பள்ளியிலேயே படிக்கட்டும் என ஆண்டு கல்வி கட்டணத்தை அளித்திருக்கிறார். மேலும் மாதந்தோறும் தன்னை வந்து பாருங்கள் என்றும் அறிவுறுத்தியிருக்கிறார்.
இந்த நிலையில் கடந்த மே 2, 2025 அன்று கர்நாடகா பள்ளி தேர்வுகள் முடிவுகள் வெளியன நிலையில் ரிஸ்வானின் தங்கை 625 மதிப்பெண்களுக்கு 606 மதிப்பெண்கள் பெற்று 97 சதவிகிதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கிறார். இந்த தகவலை உடனே சின்மய்க்கு போன் செய்து “என் உண்மையான அண்ணனுக்கு முன்னால் உங்களை அழைத்து இந்த தகவலை சொல்கிறேன். நீங்கள் என் சகோதரருக்கு இணையானவர் என்று ரிஸ்வானின் தங்கை பேச அதைக் கேட்ட சின்மய் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார். இதனை சின்மயி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர, அவரை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். தவறாக அனுப்பப்பட்ட பணம் ஒரு பெண்ணின் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது. இதனையடுத்து இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.