Viral Video : நரியை மொத்தமாக விழுங்கிய மலைப்பாம்பு.. நடுங்க வைக்கும் வீடியோ!
Python Eating Fox in Jharkhand | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வகையான வித்தியாசமான மற்றும் சுவாரஸ்யமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், ஜார்கண்டில் நரி ஒன்றை முழுவதுமாக விழுங்கிய மலைப்பாம்பின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வைரல் வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜார்கண்டில் (Jharkhand) நரியை மலைப்பாம்பு ஒன்று விழுங்கும் (Python Swallowed Fox) வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள காட்டு பகுதி ஒன்றில் மலைப்பாம்பு ஒன்று நரியை விழுங்கிக்கொண்டு இருந்த நிலையில், அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இந்த நிகழ்வை படம் பிடித்து பகிர்ந்துள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நரியை மொத்தமாக விழுங்கிய மலைப்பாம்பு
உருவத்தில் பெரிய அளவில் உள்ள மலைப்பாம்புகள் பைத்தான் என்று அழைக்கப்படுகின்றன. இந்த பாம்புகள் பார்ப்பதற்கு எவ்வளவு அச்சுறுத்தும் வகையில் இருக்கின்றனவோ அதே அளவுக்கு மிகவும் ஆபத்தானவை. இந்த வகை ராட்சத மலைப்பாம்புகள் ஒரு மனிதனையே விழுங்கும் திறன் கொண்டவை. உலக நாடுகளில் பல இடங்களில் பைத்தான்கள் மனிதர்களை விழுங்கிய சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதனால் தான் இவை மிகவும் அபாயகரமானவையாக கருதப்படுகின்றன. அந்த வகையில், ஜார்கண்டில் பைத்தான் ஒன்று நரியை விழுங்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது. அது தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.




இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் மலைப்பாம்பு ஒன்று தனது வாயில் முழு நரியை வைத்துள்ளது. சுமார் 12 அடி நீளமுள்ள அந்த மலைப்பாம்பு நரியை முழுவதுமாக விழுங்கிய நிலையில், அதனை மீண்டும் வெளியே கக்குகிறது. இந்த சம்பவம் ஜார்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்தில் உள்ள பலேடிஹா கிராமத்தில் நடைபெற்றுள்ளது. கிராமத்தை ஒட்டியுள்ள காட்டு பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், அந்த ஊர் மக்கள் அந்த பகுதியில் சூழ்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டுள்ளனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோவை பார்ப்பதற்கு மிகவும் அச்சுறுத்தும் விதமாக இருப்பதாக இருவர் பதிவிட்டுள்ளார். பொதுமக்கள் சுற்றி நின்று பார்ப்பது அவற்றுக்கு தொந்தரவாக இருக்கும். இதன் காரணமாக அவை உணவை உண்ணாமல் வெளியே கக்கிவிடும். எனவே பொதுமக்கள் இத்தகைய செயல்களை செய்ய வேண்டாம் என சிலர் கூறியுள்ளனர்.