Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இந்தியாவில் எக்ஸ் தளம் முடங்கியது – 2வது நாளாக தொடரும் பாதிப்பால் பயனர்கள் கோபம்

X Outage in India : இந்தியாவில் பிரபல சமூக வலைதளமான எக்ஸ் செயலிழந்தது. உலக அளவில் இரண்டாவது நாளாக எக்ஸ் பக்கத்தை பயன்படுத்தவில்லை எனவும் புதிய செய்திகள் கிடைக்கவில்லை எனவும் அதன் பயனர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக மக்கள் தங்கள் கோபத்தை பதிவு செய்து வருகின்றனர்.

இந்தியாவில் எக்ஸ் தளம் முடங்கியது – 2வது நாளாக தொடரும் பாதிப்பால் பயனர்கள் கோபம்
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 24 May 2025 19:58 PM

முன்னதாக Twitter என அழைக்கப்பட்ட X சமூக வலைத்தளம் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள, டிரெண்டிங்கை தெரிந்துகொள்ள ,அரசியல், சினிமா போன்றவை குறித்து தங்களது கருத்துகளை பகிர மக்களுக்கு பெரிதும் பயன்பட்டத்து. இந்த நிலையில் இரண்டாவது நாளாக தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் உள்ள பயனர்கள் “Something went wrong. Try reloading” எனும் மெசேஜ்களை எதிர்கொள்கின்றனர்.  இந்த நிலையில் மே  24 , 2025 மாலை 6 மணி அளவில் X செயலியில் மற்றும் இணைய பக்கத்தில்  திடீரென புதிய பதிவுகளை காண முடியாத அளவுக்கு பிரச்னை ஏற்பட்டது. குறிப்பாக இந்தியாவில் இதன் தாக்கம் பெரும் அளவுக்கு எதிரொலித்தது.

இரண்டாவது நாள் தொடர்ச்சியான கோளாறு

இந்த பிரச்னை இரண்டாவது நாளாக தொடர்கிறது. கடந்த மே 23, 2025  அன்று வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் எக்ஸ் தளம் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இரண்டு நாட்களாக தொடர்ந்து எக்ஸ் செயலியில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் இது பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக பயனர்கள் தங்களது கணக்குகளில் உள்நுழைய முடியாத அளவுக்கு பிரச்சனைகளைத் சந்தித்துள்ளதாக தெரிவித்தனர்.  மேலும் 50 சதவிகிதம் பேர் login செய்ய முடியவில்லை எனவும், 30 சதவிகிதம் பேர் ஆப்பில் புதிய தவகல்களை வெளியிட முடியவில்லை எனவும் 13 சதவிகிதம் பேர் இணையதள பக்கத்தை பயன்படுத்தவில்லை எனவும் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

எலான் மஸ்க்கின் குற்றச்சாட்டு

கடந்த மார்ச், 2025 மாதத்தில், எலான் மஸ்க் தன் சமூக வலைதளத்தில், “எக்ஸ் பெரும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது எனவும் இது ஒரு பெரிய திட்டமிட்ட குழுவை சார்ந்தோ அல்லது நாடு சார்ந்த தாக்குதலாகவோ இருக்கலாம்” என குறிப்பிட்டார். இது, எக்ஸ் செயலி கடந்த காலங்களில் தொடர்ந்து பலமுறை செயலிழந்து போன பிறகு ஏற்பட்ட நேரத்துக்குப் பின்னர் வந்த பதில் என்பதும் குறிப்பிடத்தக்கது. டிவிட்டரை கடந்த 2022 ஆண்டு வாங்கிய எலான் மஸ்க் தற்போது Tesla, SpaceX போன்ற நிறுவனங்களை நடத்தி வரும் இவர், அமெரிக்க அரசின் டேட்டா போன்ற விஷயங்களை கையாளும் ஒரே நபர் என கூறப்படுகிறது.

இந்தியாவில் மே 25, 2025 அன்று மாலை முதல் இந்தியாவில் எக்ஸ் தளம் செயல்படவில்லை. குறிப்பாக பலரால் புதிய செய்திகளை பார்க்க முடியவில்லை. இணையதளங்களை பயன்படுத்துவோருக்கு இத்தகையை செய்திகளை எதிர்கொள்கின்றனர். பொதுவாக  இந்தியாவில் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் தளமாக எக்ஸ் இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது எக்ஸ் தளத்தில் ஏற்பட்ட பாதிப்பு தகவல் தொடர்பு சிக்கலாகியுள்ளது. எலான் மஸ்க் எக்ஸ் சமூக தளத்தை வாங்கிய பிறகு பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருவதாக பயனர்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர்.

பீப் சாங் பிரச்னையில் இருந்த போது ரஹ்மான் செய்த செயல் - சிம்பு
பீப் சாங் பிரச்னையில் இருந்த போது ரஹ்மான் செய்த செயல் - சிம்பு...
பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல் - குஜராத்தை சேர்ந்த உளவாளி கைது!
பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல் - குஜராத்தை சேர்ந்த உளவாளி கைது!...
சந்திரமுகியில் அவர் நடித்திருந்தால் நன்றாக இருக்கும்- ஜோதிகா!
சந்திரமுகியில் அவர் நடித்திருந்தால் நன்றாக இருக்கும்- ஜோதிகா!...
ராகுல் காந்தி மீது ஜாமினில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட்!
ராகுல் காந்தி மீது ஜாமினில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட்!...
ஆர்பிஐயின் விதியால் நகைக்கடன் பெறுவதில் சிக்கல் - விஜய் கண்டனம்!
ஆர்பிஐயின் விதியால் நகைக்கடன் பெறுவதில் சிக்கல் - விஜய் கண்டனம்!...
Thug Life என டைப் செய்தால் கூகுளில் வரும் மேஜிக் - வைரல் வீடியோ
Thug Life என டைப் செய்தால் கூகுளில் வரும் மேஜிக் - வைரல் வீடியோ...
உடல் குளிர்ச்சியைத் தரும் காய்கறிகள்.. நீரிழிப்பை தடுக்கும்!
உடல் குளிர்ச்சியைத் தரும் காய்கறிகள்.. நீரிழிப்பை தடுக்கும்!...
தலைவா படத்தில் சந்தானம் பண்ண விஷயத்தை மறக்க முடியாது- விஜய்!
தலைவா படத்தில் சந்தானம் பண்ண விஷயத்தை மறக்க முடியாது- விஜய்!...
இந்தியாவில் எக்ஸ் தளம் முடங்கியது - பயனர்கள் கோபம்
இந்தியாவில் எக்ஸ் தளம் முடங்கியது - பயனர்கள் கோபம்...
பதவி நீக்கத்தால் தூக்கமில்லாமல் தவித்தேன்.. அன்புமணி புலம்பல்!
பதவி நீக்கத்தால் தூக்கமில்லாமல் தவித்தேன்.. அன்புமணி புலம்பல்!...
டெலிகிராமை தடைசெய்யும் வியாட்நாம் அரசு - என்ன காரணம் தெரியுமா?
டெலிகிராமை தடைசெய்யும் வியாட்நாம் அரசு - என்ன காரணம் தெரியுமா?...