இ-சிம் கார்டு எப்படி பயன்படுத்துவது? அதன் நன்மைகள் என்ன?
E-SIM Guide : இந்தியாவில் ஸ்மார்ட்போன் உலகில் இ-சிம் புது டிரெண்டாகி வருகிறது. டெலிகாம் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு இ-சிம் ஆப்சனை வழங்கி வருகிறது. இ-சிம் என்றால் என்ன ? அதனை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
தற்போது ஸ்மார்ட்போன் (Smartphone) உலகில் மிகப்பெரிய புரட்சியாக பார்க்கப்படுவது இ-சிம் கார்டுகள் தான். பொதுவாக நாம் பயன்படுத்தும் சிம் (Subscriber Identity Module) கார்டுகள் என்பது பிளாஸ்டிக் வடிவிலான சிப் ஒன்றை நமது மொபைலில் பொறுத்தவேண்டும். ஆனால் இ-சிம் கார்டு என்பது டிஜிட்டல் வழியில் வழங்கப்படும். அதாவது இதற்காக எந்த நாம் சிம் கார்டுகளும் வாங்கத் தேவையில்லை. மொபைலிலேயே அதற்கான அமைப்பு இருக்கும். அதனை ஆன்லைன் முறையில் ஆக்டிவ் செய்தால் போதும். நவீன ஸ்மார்ட்போன்கள், டேப்லெட், ஸ்மார்ட்வாட்ச் போன்ற அனைத்து கருவிகளிலும் இந்த அமைப்பு இருக்கும். இதனை நம் நெட்வொர்குடன் இணைக்க வேண்டியிருக்கும். இது எப்படி செயல்படும்? இதன் நன்மைகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
இ-சிம் என்றால் என்ன?
பொதுவாக இதுவரை நாம் பயன்படுத்தும் சிம் கார்டுகள் டெலிகாம் நிறுவனங்கள் வழங்கும் பிளாஸ்டிக் வடிவிலான சிப் ஒன்றை வாங்கி, நம் மொபைலில் அதற்காக கொடுக்கப்பட்டிருக்கிற ஸ்லாட்டில் பொறுத்தி பயன்படுத்தி வந்தோம். ஆனால் இ-சிம் என்பது டிஜிட்டல் வடிவில் இயங்கும். இதற்காக பிரத்யேகமாக சிம்கார்டுகள் வாங்க தேவையில்லை. அதாவது நம் மொபைல், டேப்லெட், ஸ்மார்ட்வாட்ச் போன்றவற்றில் ஏற்கனவே அதனை சிப் பொறுத்தப்பட்டிருக்கும். இந்த இ-சிம்கள் ஆன்லைனில் ஆக்டிவேட் செய்யப்படுவதால், புதிய சிம் கார்டு வாங்கவோ, மாற்றவோ தேவையில்லை. போனில் டெலிகாம் நிறுவனங்கள் வழங்கும் சேவையைப் பயன்படுத்தி மாற்றவோ, புதிதாக இணைப்பை பெறவோ முடியும்.
இதையும் படிக்க : இந்த 4 விஷயங்களை கூகுளில் தேடாதீர்கள் – சிறை தண்டனை நிச்சயம்!
இ-சிம் ஆனது வழக்கமான சிம் கார்டுகளைப் போலவே டேட்டா, வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் போன்ற சேவைகளை தருகிறது. ஆனால் புதிய பிளான்களை ஆன்லைன் வழியாக சேர்க்கலாம். ஒரே நேரத்தில் இ-சிம் கார்டு மற்றும் வழக்கமான கார்டு சிம் ஆகியவை இயங்கும்.
இ-சிம் பயன்படுத்துவதின் நன்மைகள்
- சிம் கார்டுகளை ஸ்மார்ட்போனில் இருந்து கழட்டி மாற்றத் தேவையில்லை.
- வெளிநாடுகளுக்கு பயணிக்கும்போது எளிதாக பிளான் மற்றும் மாற்றிக்கொள்ள முடியும். அங்கு புதிதாக சிம் வாங்க தேவையில்லை.
- ஒரே போனில் பெர்சனல் நம்பர், வேலைக்காக தனி நம்பர் வைத்துக்கொள்ள முடியும்.
- பிளாஸ்டிக் பயன்பாடு குறையும் என்பதால், சுற்றுச்சூழலுக்கு நல்லது.
- ரோமிங் கட்டணங்கள் குறைவாக இருக்கும் என்று கூறப்புகிரது.
- எளிதில் அகற்ற முடியாது என்பதால், போன் திருடப்படும்போது எளிதாக கண்டுபிடிக்கலாம். எனவே பாதுகாப்பானதும் கூட.
இதையும் படிக்க : அதிக வெப்பம் ஸ்மார்ட்போன்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?
இ-சிம்மின் குறைகள்
- பழைய மொபைல்கள் மற்றும் சில நெட்வொர்க்குகள் இன்னும் இ-சிம் சப்போர்ட் செய்யவில்லை. எனவே புதியதாக மொபைல் வாங்குபவர்களுக்கு மட்டுமே கைகொடுக்கும்.
- ஒருபோனில் இருந்து இன்னொரு போனுக்கு மாற்றும்போது டிஆக்டிவேஷன் மற்றும் ரீஆக்டிவேஷன் செய்ய வேண்டியிருக்கும்.
இ-சிம் ஆக்டிவேட் செய்வது எப்படி?
ஒருவேளை நம் பயன்படுத்தும்போன்களில் இ-சிம் ஆப்சன் இருந்தால் அதற்காக,
- Settings → Connections → SIM Manager செல்லவும்.
- Add eSIM தேர்வு செய்யவும்.
- Scan QR code” என்பதைத் தேர்வு செய்து, நமக்கு டெலிகாம் நிறுனங்களால் வழங்கப்பட்ட QR Code-ஐ ஸ்கேன் செய்யவும்.