Vivo V60 : அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமானது விவோ வி60.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

Vivo V60 Smartphone Launched in India | விவோ நிறுவனம் கடந்த சில நாட்களாக தனது வி சீரீஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது தனது வி60 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

Vivo V60 : அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமானது விவோ வி60.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

விவோ வி60 ஸ்மார்ட்போன்

Published: 

14 Aug 2025 13:59 PM

விவோ நிறுவனம் இந்தியாவில் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. விவோ நிறுவனம் கடந்த சில நாட்களாக தனது வி சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வரும் நிலையில், தற்போது விவோ வி60 ஸ்மார்ட்போனை (Vivo V60 Smartphone) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே அறிமுகமான வி சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் (Vivo V Series Smartphones) மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் அறிமுகமானது விவோ வி60 ஸ்மார்ட்போன்

விவோ நிறுவனத்தின் வி50 ஸ்மார்ட்போன் பிப்ரவரி, 2025-ல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அதன் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன் ஆன விவோ வி60 ஸ்மார்ட்போன் தற்போது இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) உள்ளிட்ட பல்வேறு அசத்தல் அம்சங்கள் இடமபெற்றுள்ளன. சிறந்த அம்சங்களுடன் கூடிய மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன் ஆக இது அறிமுகமாகியுள்ளது.

இதையும் படிங்க : Vivo Y400 5G : இந்தியாவில் அறிமுகமானது விவோ ஒய்400 5ஜி ஸ்மார்ட்போன்.. சிறப்பு அம்சங்கள் என்ன?

அசத்தல் அம்சங்களை கொண்டுள்ள விவோ வி60

இதில் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 பிராசசர் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தை கொண்டுள்ளது. இதில் 6.77 இன்ச் Curved AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 6,500 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், 90 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சமும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Motorola G86 Power : வெறும் ரூ.17,999-க்கு அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமானது மோட்டோரோலா ஜி86 பவர்!

கேமரா மற்றும் இதர சிறப்பு அம்சங்கள்

இந்த ஸ்மார்ட்போனின் பின்பக்கத்தில் மூன்று கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் முன்பக்கத்தில் 50 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் 128ஜிபி ஸ்டோரேஜ், 12ஜிபி ரேம் 256 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 16ஜிபி ரேம் 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆகிய வேரியண்டுகளின் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.36,999 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.