Vivo T4 Lite 5G Smartphone : ரூ.10,000-க்கு கீழ் அறிமுகமான விவோ டி4 லைட் 5ஜி.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

Vivo T4 Lite 5G Smartphone Launched in India | விவோ நிறுவனம் தனது டி சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது விவோ டி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Vivo T4 Lite 5G Smartphone : ரூ.10,000-க்கு கீழ் அறிமுகமான விவோ டி4 லைட் 5ஜி.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

விவோ டி4 லைட் 5ஜி

Published: 

24 Jun 2025 13:33 PM

 IST

விவோ (Vivo) நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. விவோ நிறுவனம் சமீப காலமாக தனது டி சீரீஸ் ஸ்மார்போன்களை (T Series Smartphones) அறிமுகம் செய்து வரும் நிலையில், தற்போது விவோ டி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போனை (Vivo T4 Lite 5G Smartphone) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விவோவின் iQOO Z10 லைட் ஸ்மார்ட்போன் (Vivo iQOO Z10 Lite Smartphone) மாதிரியே இருக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், விவோ நிறுவனம் அறிமுகம்  செய்துள்ள இந்த விவோ டி4 லைட் ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

விவோ டி4 லைட் 5ஜி – விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்

இந்த விவோ டி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் மூன்று வேரியண்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 4ஜிபி + 128 ஜிபி ஸ்ரோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.9,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல, 6ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.10,999-க்கும், 6ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.12,999-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்போன்கள் ப்ரிசம் ப்ளூ மற்றும் டைட்டானியம் கோல்டு ஆகிய இரண்டு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

 ஜூலை 2 முதல் விற்பனைக்கு வருகிறது

மேலும் சில சிறப்பு அம்சங்கள்

இந்த விவோ டி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் சிறந்த பேட்டரி அம்சத்தை கொண்டுள்ளது. இதில் 6.74 இன்ச் HD+ டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6,000 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 50 மெகாபிக்சல் சோனி ஏஐ மெயின் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கொண்டுள்ளது. மேலும், இதில் 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. குறைந்த விலையில், சிறந்த தோற்றம் மற்றும் செயல்திறன் கொண்ட ஸ்மார்ட்போன்களை வாங்க நினைக்கும் நபர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

வனப்பகுதியைச் சுற்றிப் பார்த்து ரசித்த இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள்..
பொது சொத்துக்களை மதிக்கும் பயணிகள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்.. வந்தே பாரத் ரயில் குறித்த வைரல் போஸ்ட்..
ஐசிசி உலகக் கோப்பை 2026.. ஐசிசியின் எச்சரிக்கை.. வங்கதேசத்தின் இறுதி பதில்
குட்டியை காப்பாற்ற தாய் குரங்கு செய்த செயல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..