Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Truecaller: ட்ரூகாலரில் ஸ்பேம் மெசேஜ்களை தடுக்க ஏஐ!

Truecaller Introduces AI feature : இன்பாக்ஸில் உள்ள செய்திகளை சரிபார்க்க ட்ரூகாலர் AI அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது. இந்தப் புதிய அம்சம் செய்தி ஐடிகள் என்று அழைக்கப்படுகிறது. இவை ஸ்பேம் மெசேஜ்களை தனியாக பிரித்து கிரீன் டிக்குடன் நமக்கு அளிக்கும் என்பதால் அவற்றை நம்மால் எளிதில் அடையாளம் காண முடியும்.

Truecaller: ட்ரூகாலரில் ஸ்பேம் மெசேஜ்களை தடுக்க ஏஐ!
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 14 May 2025 23:57 PM

லோன் (Loan) செயலிகளில் இருந்து நமக்கு வரும் ஸ்பேம் மேசேஜ்கள், போன் அழைப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல நேரங்களில் அவை எரிச்சலூட்டும் வகையில் இருக்கின்றன. முக்கியமான ஒரு மேசேஜை தேட வேண்டும் என்றால் இந்த ஸ்பேம் மெசேஜ்கள் வந்து நிற்கின்றன. இந்த நிலையில் அவற்ற முன் கூட்டியே கண்டறிந்து தடுக்க  ட்ரூகாலர் (True Caller)  ஏஐ (AI)  தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துகிறது. இந்த புதிய அம்சம் ஸ்பேம் செய்திகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இன்பாக்ஸை பாதுகாக்கிறது. இந்த அம்சம் செய்தி ஐடிகள் என்று அழைக்கப்படுகிறது. இந்த அம்சம் SMS இன்பாக்ஸை ஸ்கேன் செய்து OTPகள், டெலிவரி அப்டேட்கள் மற்றும் டிக்கெட் முன்பதிவுகள் உள்ளிட்ட பல்வேறு செய்திகளை பிரித்துக்கொடுக்கும்.

ஏஐ உதவியுடன் ஸ்பேம் மெசேஜ்களை பிரித்துக்கொடுக்கும் ட்ரூகாலர்

அங்கீகரிக்கப்பட்ட வணிகங்களிலிருந்து வரும் மெசேஜ்களை ட்ரூகாலர் அதற்கென இருக்கும் ஃபில்டர் மூலம் தனியாக பிரிக்கிறது. இவ்வாறு பிரிக்கப்பட்ட மெசேஜ்கள் கிரீன் கலர் டிக்குடன் இன்பாக்ஸில் இருக்கும். அவற்றின் அடிப்படையில் நாம் அதனை வைத்திருப்பதா வேண்டாமா என முடிவு செய்துகொள்ளலாம்.

இந்தியா உட்பட 30 நாடுகளில் மெசேஜ் ஐடிகள் என்ற அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்தந்த மொபைல்களில் மட்டுமே இந்த ஸ்கேனிங் செய்யப்படும் என்பதால், வாடிக்கையாளர் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும் என்று அந்நிறுவனம் நிறுவனம் கூறுகிறது. இந்த அம்சம் பிரீமியம் சந்தாதாரர்களுக்கு மட்டும் அல்லாமல் எல்லோரும் பயன் பெறும் வகையில் அளிக்கப்படுகிறது. இந்த அம்சம் ஆங்கிலம் மற்றும் இந்தி போன்ற இந்திய மொழிகளில் மேசேஜ்களை பிரித்தறிந்து நமக்கு அளிக்கும்.

செக் செய்யப்பட்ட மெசேஜ்களுக்கு கிரீன் டிக்

மெசேஜ் செக்கிங்  மற்றும் அதர் யூசேஜ் என நாம் அனுமதி வழங்கினால் மட்டுமே இந்த அம்சம் செயல்படும். இந்த அம்சம் மோசடி மற்றும் ஸ்பேம் செய்திகளை வகைப்படுத்துகிறது. மேலும் தேவையான செய்திகளை கிரீன் டிக் குறியீட்டுடன் காட்டுகிறது. ட்ரூகாலர் மற்ற அவசர செய்திகளையும் தனித்தனியாகக் காண்பிக்கும். இந்த அம்சம் பயனர்கள் செய்தியில் என்ன முக்கியம் என்பதைப் பார்க்கவும் அனுமதிக்கிறது. இது ட்ரூகாலர் பயனர்களுக்கு சிறந்த சேவையை வழங்க இந்த நடைமுறையை கொண்டு வந்திருக்கிறது.

தொடர்ந்து அதிகரிக்கும் ஸ்பேம் மெசேஜ்கள் மற்றும் மோசடி அழைப்புகளால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிற சூழலில், ட்ரூகாலர் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய AI சார்ந்த மெசேஜ் ஐடண்டிஃபிகேஷன் அம்சம் ஒரு முக்கியமான முன்னேற்றமாகும். இது முக்கியமான தகவல்களை எளிதாக கண்டறியவும், தேவையற்ற செய்திகளை பின்தள்ளவும் உதவுகிறது. பாதுகாப்பும், அனுகூலமும் இணைந்த இந்த தொழில்நுட்பம், பயனர்களின் மொபைல் அனுபவத்தை மேம்படுத்தும் ஒரு முக்கிய கட்டமாக அமையும்.

Chikoo Benefits :சப்போட்டோவால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா?
Chikoo Benefits :சப்போட்டோவால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா?...
பகலில் ஜங்க் ஃபுட், இரவில் நோ ஃபுட் - நமீதாவின் ஃபிட்னஸ் சீக்ரெட்
பகலில் ஜங்க் ஃபுட், இரவில் நோ ஃபுட் - நமீதாவின் ஃபிட்னஸ் சீக்ரெட்...
ஜங்க் ஃபுட் விளம்பரங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு
ஜங்க் ஃபுட் விளம்பரங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு...
ரஜினிகாந்த்துடன் அதிகம் நடிக்காதது ஏன்? மனம் திறந்த ஊர்வசி
ரஜினிகாந்த்துடன் அதிகம் நடிக்காதது ஏன்? மனம் திறந்த ஊர்வசி...
அட ஆச்சர்யம்.. காரை ஸ்கிட் செய்து இளைஞருக்கு டப் கொடுத்த தாத்தா
அட ஆச்சர்யம்.. காரை ஸ்கிட் செய்து இளைஞருக்கு டப் கொடுத்த தாத்தா...
ஐபிஎல் தொடங்கும் முதல்நாளே கொட்டப்போகும் மழை.. போட்டி ரத்தா..?
ஐபிஎல் தொடங்கும் முதல்நாளே கொட்டப்போகும் மழை.. போட்டி ரத்தா..?...
மதுரையில் தொடங்குகிறதா சூர்யாவின் "வாடிவாசல்" ஷூட்டிங்?
மதுரையில் தொடங்குகிறதா சூர்யாவின்
பிரபஞ்சம் விரைவில் அழியப்போகுதா? ஆய்வு முடிவுகள் கூறுவது என்ன?
பிரபஞ்சம் விரைவில் அழியப்போகுதா? ஆய்வு முடிவுகள் கூறுவது என்ன?...
கோடையில் சுரைக்காய் ஜூஸ் குடித்தால் இவ்வளவு அற்புத நன்மைகளா?
கோடையில் சுரைக்காய் ஜூஸ் குடித்தால் இவ்வளவு அற்புத நன்மைகளா?...
மலையாளத்தில் மிஸ் பன்னாமல் பார்க்க வேண்டிய ஃபீல் குட் படங்கள்
மலையாளத்தில் மிஸ் பன்னாமல் பார்க்க வேண்டிய ஃபீல் குட் படங்கள்...
தக் லைஃப் டிரெய்லர் - இசை வெளியீட்டு விழா அறிவிப்பு வெளியானது!
தக் லைஃப் டிரெய்லர் - இசை வெளியீட்டு விழா அறிவிப்பு வெளியானது!...