2026-ல் அறிமுகமாக உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் அட்டகாசமான 5 கருவிகள்!

Five Apple Gadgets Expected To Launch | ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் கருவிகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், 2026 ஆம் ஆண்டு சில அட்டகாசமான புதிய கருவிகளை அறிமுகம் செய்ய உள்ளது.

2026-ல் அறிமுகமாக உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் அட்டகாசமான 5 கருவிகள்!

மாதிரி புகைப்படம்

Published: 

23 Jan 2026 15:32 PM

 IST

இன்றளவும் உலக அளவில் ஸ்மார்ட்போன் (Smartphone) சந்தையின் அதிக பலம் கொண்ட நிறுவனமாக ஆப்பிள் (Apple) உள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட கேட்ஜெட்டுகள் (Gadgets) மிகவும் தரம் வாய்ந்ததாக உள்ள நிலையில், அது மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இவ்வாறு தங்களது வாடிக்கையாளர்களை தொடர்ந்து ஆச்சர்யமூட்டும் வகையில் பல சிறப்பு அம்சங்களை கொண்ட அட்டகாசமான படைப்புகளை அந்த நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், 2026 ஆம் ஆண்டில் ஐந்து புதிய கருவிகளை அறிமுகம் செய்வதற்கான பணியில் ஆப்பிள் இறங்கியுள்ளது. அவை என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

2026-ல் ஆப்பிள் அறிமுகம் செய்ய உள்ள 5 முக்கிய கருவிகள்

2026-ல் ஆப்பிள் அறிமுகம் செய்ய உள்ள சில அட்டகாசமான கருவிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஸ்மார்ட் ஹோம் ஹப்

2025 ஆம் ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் கருவி இதுவாகும். இந்த கருவி வீட்டில் உள்ள அனைத்து செயலிகளையும் கட்டுப்படுத்த உதவும். வீட்டுக்கு பாதுகாப்பு வழங்குவது மட்டுமன்றி, ஸ்மார்ட்போனில் உள்ளதை போல ஃபேஸ் கால் பேச முடியும். இதனை ஸ்பீக்கருக்கு அடியிலோ அல்லது சுவரிலோ வைத்து பயன்படுத்தலாம்.

இதையும் படிங்க : அப்ளிகேஷன் முதல் ஆற்றல் வரை – ஏஐ வளர்ச்சியில் இந்தியாவின் 5 அடுக்கு கட்டமைப்பு

ஃபேஸ் ஐடி உடன் கூடிய கதவு பெல்

ஃபேஸ் ஐடி உடான் கூடிய கதவு பெல்லை (Door Bell With Face ID) ஆப்பிள் அறிமுகம் செய்ய உள்ளது. இதனை கதவில் பொருத்துவதன் மூலம் முக அடையாளத்தை வைத்து கதவை திறக்க முடியும். வீட்டில் பாதுகாப்பை இது மேலும் உறுதியாக்கும் என கூறப்படுகிறது.

குறைந்த விலை மேக் புக்

ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலையில் மேக் புக் (Mac Book) அறிமுகம் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இது ஐபோன் 16 ப்ரோ ஸ்மார்ட்போனின் ஏ18 ப்ரோ சிப் அம்சம் மற்றும் 12.9 முதல் 13 இன்ச் டிஸ்பிளே உடன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : ஸ்மார்ட்போனை காரில் சார்ஜ் செய்வதில் இவ்வளவு சிக்கல்களா?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

மடிக்க கூடிய ஐபோன்

ஆப்பிளின் ஐபோன் 18 சீரீஸ் ஸ்மார்ட்போன்களுடன் இந்த மடிக்க கூடிய ஐபோனும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 7.7 இன்ச் உட்பக்க ஸ்கிரீன் மற்றும் 5.3 இச்ன் வெளிபக்க டிஸ்பிளே இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

ஏஆர் ஸ்மார்ட் கிளாஸ்

ஏஆர் (AR – Augmented Reality) ஸ்மார்ட் கிளாஸை அறிமுகம் செய்வதற்கான பணிகளையும் ஆப்பிள் கையில் எடுத்துள்ளது. இந்த கிளாசில் ஸ்பீக்கர், கேரமா, புகைப்படங்கள், வீடியோக்கள், வாய்ஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் இடம்பெற உள்ளன என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வனப்பகுதியைச் சுற்றிப் பார்த்து ரசித்த இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள்..
பொது சொத்துக்களை மதிக்கும் பயணிகள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்.. வந்தே பாரத் ரயில் குறித்த வைரல் போஸ்ட்..
ஐசிசி உலகக் கோப்பை 2026.. ஐசிசியின் எச்சரிக்கை.. வங்கதேசத்தின் இறுதி பதில்
குட்டியை காப்பாற்ற தாய் குரங்கு செய்த செயல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..