சாராண பேட்டரிக்கும் சிலிகான் பேட்டரிக்கும் உள்ள வித்தியாசம்? எது நல்லது?

New Battery Technology : சிலிகான் கார்பன் பேட்டரி என்பது ஒரு ஏற்கனவே பயன்படுத்தப்படும் லித்தியம் அயன் பேட்டரியின் புதிய வடிவமாக கூறப்படுகிறது. அதற்கும் தற்போது ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சாராண பேட்டரிக்கும் சிலிகான் பேட்டரிக்கும் உள்ள வித்தியாசம்? எது நல்லது?

மாதிரி புகைப்படம்

Updated On: 

30 Apr 2026 17:02 PM

 IST

சமீப காலங்களில் ஸ்மார்ட்போன் தொழில்நுட்பங்களில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பேட்டரி தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக, இப்போது நீண்ட நேரம் சார்ஜ் நிற்க கூடிய வகையில் பெரிய பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டாலும், மொபைல்கள் மிகவும் சிலிம்மாக உருவாக்கப்படுகின்றன. இதற்கான சிலிகான் கார்பன் பேட்டரி முக்கிய காரமாக கூறப்படுகிறது. இதனால் நீண்ட நேரம் சார்ஜ் நிற்க கூடிய வகையில் பெரிய பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டாலும் போன் ஸ்லிம்மாகவே இருக்கும்.

சிலிகான் கார்பன் பேட்டரி என்றால் என்ன?

சிலிகான் கார்பன் பேட்டரி என்பது ஒரு ஏற்கனவே பயன்படுத்தப்படும் லித்தியம் அயன் பேட்டரியின் புதிய வடிவமாக கூறப்படுகிறது. இதில் வழக்கமாக பயன்படுத்தப்படும் கிராஃபைட் அனோட்டிற்கு பதிலாக, இதில் சிலிகான் பயன்படுத்தப்படுகிறது. இது பேட்டரியின் செயல் திறனை அதிகரிக்கிறது. சாதாரண லித்தியம்-அயன் பேட்டரி 300 முதல் 400 wh/kg இருந்தால், சிலிகான் கார்பன் பேட்டரி, 500 முதல் 600 wh/kg அளவு கொண்டதாக இருக்கும். அதாவது அதே அளவிலான பேட்டரியில் கூடுதல் மின் சக்தியை சேமிக்க முடியும்.

இந்த சிலிகான் கார்பன் பேட்டரி காரணமாக, அதே அளவுள்ள பேட்டரியில் 40 சதவிகிதம் கூடுதல் பவரை சேமிக்க முடியும். இதனால் பெரிய mAh பேட்டரிகள் இருந்தாலும், மொபைலின் அளவு குறையும். குறிப்பாக போனில் 6000 mAh அளவுள்ள பேட்டரி இருந்தாலும் போனின் டிசைன் சிறியதாகவே இருக்கும்.

இந்த சிலிகான் கார்பன் பேட்டரியின் கூடுதல் நன்மை அதன் வேகமான சார்ஜிங் வசதி தான். 80W அல்லது அதற்கு மேலும் வேகமான சார்ஜிங் முறையை இது ஆதரிக்கும். இதனால் குறைவான நேரங்களில் பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்ய முடியும்.

முன்பை விட இந்த சிலிகான் பேட்டரியின் ஆயுள் நீண்ட காலத்திற்கு வரும். அதாவது கிட்டத்தட்ட இந்த சிலிகான் பேட்டரியின் மூலம் 1000 முறை சார்ஜ் செய்ய முடியும் என கூறப்படுகிறது. மேலும் பேட்டரியின் செயல் திறன் விரைவாக குறையாது. இதனால் நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம் என்பதால் சுற்றுச்சூழல் பாதிக்காது.
மேலும் சிலிகான் அதிகம் கிடைக்கும் பொருள் என்பதால் பேட்டரி தயாரிப்பு செலவு குறையும். இதனால் எதிர்காலத்தில் போன் விலையும் குறையலாம். சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்.

தற்போது ஒன்பிளஸ், ஜியோமி, ஓப்போ, விவோ, போன்ற சீன நிறுவனங்கள் இந்த பேட்டரியை பயன்படுத்தி வருகின்றன. மேலும் ஆப்பிள், சாம்சங் போன்ற நிறுவனங்கள் இந்த பேட்டரியை பயன்படுத்தும் முடிவை பரிசோதித்து வருவதாக கூறப்படுகிறது.

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..