Redmi K90 Pro Max : அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமான ரெட்மி கே90 ப்ரோ மேக்ஸ்!

Redmi K90 Pro Max Introduced in China | ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி கே 90 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.

Redmi K90 Pro Max : அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமான ரெட்மி கே90 ப்ரோ மேக்ஸ்!

ரெட்மி கே 90 ப்ரோ மேக்ஸ்

Updated On: 

25 Oct 2025 21:05 PM

 IST

பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் நிறுவனமாக ரெட்மி உள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை ரெட்மி அறிமுகம் செய்து வருகிறது. ரெட்மி (Redmi) நிறுவனம் தனது ரெட்மி கே 90 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனை (Redmi K90 Pro Max Smartphone) சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன், ரெட்மி நிறுவனத்தின் மிகச் சிறந்த அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போனாக கருதப்படுகிறது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரெட்மி கே 90 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம்

இந்த ரெட்மி கே 90 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் 6.9 இன்ச் OLED டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குவால்கம் ஸ்நாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 7,560 mAh பேட்டரி அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 32 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல ஸ்மார்ட்போனின் பின் பக்கத்தில் 50 மெகா பிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இது 100 வாட்ஸ் வயர்டு சார்ஜிங், 50 வாட்ஸ் வயர்லஸ் சார்ஜிங் மற்றும் 22.5 வாட்ஸ் ரிவர்ஸ் வயர்லஸ் சார்ஜிங் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.

இதையும் படிங்க : iQOO 15 : அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமான iQOO 15 ஸ்மார்ட்போன்!

ரெட்மி கே 90 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் – விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்

  • 12ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி கே90 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் 3,999 யென்னுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.42,000 ஆகும்.
  • 12ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி கே90 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் 4,999 யென்னுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.55,300 ஆகும்.
  • 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரே கொண்ட ரெட்மி கே90 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் 4,799 யென்னுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.59,000 ஆகும்.
  • 16 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி ஸ்டோரேக் கொண்ட ரெட்மி கே90 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் 5,299 யென்னுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.67,000 ஆகும்.