Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மாருதி சுசூகியின் விக்டோரிஸ் எஸ்யூவி – டிசைன் மற்றும் மைலேஜ் விவரங்கள்

Maruti Victoris: மாருதி சுசூகியின் விக்டோரிஸ் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் முன்பதிவு விரைவில் துவங்கவுள்ள நிலையில் விலை குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கட்டுரையில் விக்டோரிஸ் எஸ்யூவி காரின் டிசைன் மற்றும் மைலேஜ் உள்ளிட்ட விவரங்கள் குறித்து பார்க்கலாம்.

மாருதி சுசூகியின் விக்டோரிஸ் எஸ்யூவி – டிசைன் மற்றும் மைலேஜ் விவரங்கள்
மாருதி விக்டோரிஸ்
Karthikeyan S
Karthikeyan S | Published: 03 Sep 2025 21:03 PM

இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனம் மாருதி சுசூகி தனது அரெனா பிரிவின் விக்டோரிஸ் எஸ்யூவி காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எஸ்யூவி காரானது Got it All என்ற டேக் லைனுடன் வந்துள்ளது. விரைவில் இந்த கார் முன்பதிவு தொடங்கவுள்ள நிலையில் விலை தொடர்பான அறிவிப்புகள் விரைவில் அடுத்த கட்டமாக வெளிவரவுள்ளது. இதன் வடிவமைப்பு இ- விட்டாரா போன்ற டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாருதி சுசூகியின் இந்த விக்டோரிஸ் எஸ்யூவி காரின் பாதுகாப்பு அம்சங்கள் மைலேஜ் ஆகியவை குறித்த விவரங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

பாதுகாப்பு அம்சங்கள்

மாருதி மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில், எஸ்யூவி 5 ஸ்டார் கிராஷ் டெஸ்ட் மதிப்பீட்டை பெற்றுள்ளது. இந்த காரில் 6 ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்டாக வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்தியாவல் முதன்முறையாக லெவல் 2 அடாஸ் (ADAS) தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக், அடாப்டிவ் குரூஸ் கண்ட்ரோல், ஹைபீம் அசிஸ்ட், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர், ரியர் கிராஸ் டிராஃபிக் அலர்ட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. மேலும் நான்கு வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள், எலக்ட்ரானிக் பார்க்கிங்க் பிரேக், ஆட்டோ ஹோல்ட் வசதி ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.

வெளிப்புற வடிவமைப்பு

விக்டோரிஸ் எஸ்யூவி முன்புறம் இ-விட்டாரா பாணியை ஒத்திருக்கிறது. மேலும் இதில் முன்புறம் ஸ்லீக் எல்இடி ஹெட்லாம்புகள், குரோம் ஸ்டிரிப், உயர்ந்த பம்பர் ஆகியவை இதன் சிறப்பான அம்சங்கள். 17 இன்ச் ஏரோ கட் அலாய் வீல்கள், மற்றும் நீளமான கண்ணாடி ஆகியவை எஸ்யூவி தோற்றத்தை உயர்த்துகின்றன. பின்புறம் ஸ்கேட்டர் ஸ்டைல் எல்இடி லாம்புகள் வழங்கப்பட்டுள்ளன.

விக்டோரிஸ் SUV-ன் முன்புறம் e-Vitara பாணியை ஒத்திருக்கிறது. ஸ்லீக் LED ஹெட்லாம்புகள், குரோம் ஸ்டிரிப், உயர்ந்த பம்பரில் அமைக்கப்பட்ட பனி விளக்குகள் ஆகியவை முன்னிலை அம்சங்கள். பக்கவாட்டில் 17-இன்ச் ஏரோ-கட் அலாய் வீல்கள் மற்றும் நீளமான கண்ணாடி பகுதி SUV தோற்றத்தை உயர்த்துகின்றன. பின்புறம் ஸ்கேட்டர்-ஸ்டைல் LED டெயில் லாம்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த காரில் மொத்தம் இதில் 7 மொனோடோன் மற்றும் 3 டூயல் டோன் மற்றும் இதில் புதிய மிஸ்டிக் கிரீன் மற்றும் எடர்னல் ப்ளூ ஆகிய நிறங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

உள் வடிவமைப்பு மற்றும் அம்சங்கள்

காரின் டாஷ்போர்டு 3 லேயர் வடிவமைப்புடன் பியானோ பிளாக் ஹைலைட்ஸ் ஆகியவை கொண்டுள்ளது. இதில் 10.1 இன்ச் ஸ்மார்ட் பிளே புரோ எக்ஸ் டச் ஸ்கிரீன், 8 ஸ்பீக்கர் இன்ஃபினிட்டி சவுண்ட் சிஸ்டம் மற்றும் 5.1 டால்பி அட்மாஸ், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர்,  வெண்டிலேட்டர் சீட்கள், வயர்லெஸ் சார்ஜிங் வசதி, 360 டிகிரி கேமரா, பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த விக்டோரிஸ் எஸ்யூவியில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக கியர் பாக்ஸ், கொடுக்கப்பட்டுள்ளது. இதில் சிஎன்ஜி ஆப்சனும் கிடைக்கும். அதாவது பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இரண்டிலும் ஓட்டலாம். இதில் ஆட்டோ, ஸ்நோ, ஸ்போர்ட், லாக் போன்ற டிரைவ் மோடுகள் இருக்கும்.  கூடுதலாக ஹில் டிசென்ட் கண்ட்ரோல் சேர்க்கப்பட்டுள்ளது.

மைலேஜ்

பெட்ரோல் மேனுவல் 1 லிட்டருக்கு 21.8 கி.மீ மைலேஜ் கொடுக்கும். அதே போல ஆட்டோமேட்டிக் முறையில் இயக்கினால் 1 லிட்டர் பெட்ரோலுக்கு 21.06 கி.மீட்டர் மைலேஜ் கொடுக்கும். அதே போல சிஎன்ஜி மாடலில் 1 கிலோ சிஎன்ஜிக்கு 27.02 கி.மீ கொடுக்கும்.