சாட்ஜிபிடி, பிளிப்கார்டை பின்னுக்கு தள்ளிய செயலி.. பதிவிறக்கத்தில் நம்பர் இதுதான்.. என்ன தெரியுமா?
Indian Oil LPG Gas Cylinder Booking App Become Top | மத்திய கிழக்கில் நிலவி வரும் சிக்கல் காரணமாக உலக அளவில் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு, இந்தியாவில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு உருவாகியுள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக இந்தியன் ஆயில் எல்பிஜி கேஸ் சிலிண்டர் புக்கிங் செயலி மாறியுள்ளது.

மாதிரி புகைப்படம்
மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றம் காரணமாக கடந்த சில நாட்களில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் சாட்ஜிபிடி (ChatGPT) உள்ளிட்ட செயலிகளை ஒரு செயலி முறியடித்து அதிக பதிவிறக்கங்களை கொண்டு புதிய சாதனை படைத்துள்ளது. அது என்ன செயலி, சமீப காலங்களில் மட்டும் அதிக அளவிலான பொதுமக்கள் அந்த செயலியை பதிவிறக்கம் செய்வதற்கான காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சமீபத்தில் இந்தியாவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி
பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் ஒவ்வொரு தேவைக்காகவும் ஒரு செயலியை பயன்படுத்துகின்றனர். அவற்றில் பொழுதுபோக்கு மற்றும் தகவல் பரிமாற்ற செயலிகள் தான் முதன்மை வகிக்கும். கடந்த சில மாதங்களாக சாட்ஜிபிடி உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) சாட்பாட்களின் பதிவிறக்கங்கள் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது சாட்ஜிபிடி, பிளிப்கார்ட் உள்ளிட்ட செயலிகளை தாண்டி வேறு ஒரு செயலி அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி என்ற பெருமையை அடைந்துள்ளது. அதுதான், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எல்பிஜி கேஸ் சிலிண்டர் புக் செய்யும் செயலி.
இதையும் படிங்க : பட்ஜெட் விலையில் அசத்தல் அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்ட IQOOZ11x!
இந்தியாவில் எல்பிஜி தட்டுப்பாட்டால் ஏற்பட்ட சிக்கல்
அமெரிக்கா (America) மற்றும் இஸ்ரேலுக்கு (Israel) பதிலடி கொடுக்கும் விதமான ஈரான் (Iran), ஹோர்முஸ் (Hormuz) நீரிணையை மூடியது. இதன் காரணமாக உலக அளவில் பெரிய அளவில் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக இந்தியாவில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்ம் சமைப்பதற்கு கேஸ் சிலிண்டர் இல்லாமல் போய்விடுமோ என பொதுமக்கள் கடும் குழப்பத்தில் இருந்து வருகின்றனர். இந்த சூழலில் தான், இந்தியாவில் கடந்த சில நாட்களாக அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக இந்தியன் ஆயில் செயலி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : Street View முதல் 3D காட்சிகள்.. அட்டகாசமான அம்சங்களை வழங்கும் கூகுள் மேப்ஸின் Ask Maps!
மார்ச் 13, 2026 முதல் மார்ச் 15, 2026 வரை கூகுள் பிளே ஸ்டோரில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாகவும், மார்ச் 11, 2026 முதல் ஆப்பிள் ஸ்டோரில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாகவும் இது உள்ளது குறிப்பிடத்தக்கது.