கூகுள்-சாட் ஜிபிடி-யில் இதை தேடினால் சட்ட சிக்கலை சந்திக்க நேரிடும்…இணையவாசிகளே கவனம்!
Google And Chatgpt: நாம் கூகுள் மற்றும் சாட் ஜிபிடி-யில் இந்த மாதிரியான விஷயங்களை தேடினால் குற்றவழக்குகளில் சிக்க நேரிடும். அவை என்ன மாதிரியான விஷயங்கள் என்பதை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம். இணைய வாசிகளே கவனமாக செயல்பட வேண்டும் .

கூகுளில் இதை தேடினால் சட்ட வழக்கில் சிக்க வாய்ப்பு
பொதுமக்கள் மத்தியில் 6-ஆம் விரலாக உருவெடுத்துள்ள செல்போனில் உள்ள இணையதளம் மூலம் கூகுளில் நாம் என்ன வேண்டுமானாலும் தேடலாம். ஆனால், அதில் சில குறிப்பிட்ட விஷயங்களை தேடினால் அது நம்மளை சட்ட சிக்கலில் சிக்க வைக்க வாய்ப்பு உள்ளது. அப்படி கூகுளில் என்ன தேடினால் நாம் சட்ட சிக்கலில் மாட்டிக் கொள்வோம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். துப்பாக்கி குண்டுகள் மற்றும் பல்வேறு வகையான ஆயுதங்கள் தொடர்பாக நாம் கூகுளில் தேடினால். அது தானியங்கி பாட்களாக கண்காணிக்கப்படுகின்றன. அதாவது ஒரு வெடிகுண்டை எப்படி உருவாக்குவது என்பது போன்ற முக்கிய வார்த்தைகளால் நாம் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது. நல்ல செயலுக்காக நாம் கூகுளில் வெடிகுண்டு என்ற வார்த்தையை தேடினாலும், அது குற்றம் சார்ந்ததாக எடுத்துக் கொள்ளப்பட்டு விசாரணை வளையத்தில் சிக்கும் நிலை உள்ளது.
குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள்
இதே போல, கூகுளில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை தேடினாலும், அந்த வீடியோக்களை இணையதளம் மூலமாக பார்த்தாலும், நமது செல்போன் இணைய தொடர்பானது குற்றவியல் தரவு தளங்களுடன் இணைக்கப்பட்டு விடும். அதன்படி, கூகுளில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை தேடிய குற்றத்துக்காக அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்க வாய்ப்புகள் உள்ளது. எனவே கூகுளில் இது போன்ற ஆபத்தான விஷயங்களை தேடக்கூடாது. மேலும், மற்றவர்களின் செல்போன்கள் உள்ளிட்ட மின் சாதனங்களை ஹேக் செய்வதற்கான ஹேக்கிங் கருவிகளை ஆன்லைன் மூலமாக பதிவிறக்குவது அல்லது ஹேக்கிங் கருவிகள் தொடர்பாக கூகுளில் தேடுவது ஆகியவை நம்மை சட்ட சிக்கலில் சிக்க வைப்பதற்கான வழியாகும்.
மேலும் படிக்க: குடியரசு ’26-26′ என்ற பெயரில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம்.. பாதுகாப்பு வளையத்தில் டெல்லி..
கிராக் செய்யப்பட்ட மென் பொருள்கள்
வலைத்தளங்கள் மற்றும் மென்பொருளின் பாதுகாப்பை ஹேக் செய்து சோதிக்க பல்வேறு நெறிமுறைகள் உள்ளன. மேலும், திருட்டு திரைப்படங்கள் மற்றும் கிராக் செய்யப்பட்ட மென்பொருள்கள், பிற பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கங்களை கூகுளி்ல் தேடுவதும் சட்ட விரோதமாகும். இந்த சொற்களை தேடுவது அல்லது உள்ளடக்கத்தை சட்ட விரோதமாக பதிவிறக்குவது தளங்களை பயன்படுத்துவதற்கு அபராதம் விதிக்கப்படலாம். வழக்கமாக முதல் சில நேரங்களில் உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும்.
குற்றவியல் வழக்குகளி சிக்க நேரிடும்
ஆனால், அதையும் மீறி சில உள்ளடக்கங்களை பகிர்ந்தால் அல்லது பதிவிறக்கம் செய்தால் குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக நேரிடும். எனவே, கூகுளில் சட்ட விரோதமான நடவடிக்கைகள் தொடர்பான எதையும் தேடினால், அது சாட் ஜி பி டி மற்றும் இதே போன்ற அரட்டை பாட் சேவைகளுடன் ஒரு தரவு த்துக்கு செல்லும். பல்வேறு மக்கள் சாட் ஜிபிடி உடனான அரட்டைகளை ஆன்லைனில் கண்டறிந்துள்ளனர்.
மேலும் படிக்க:குற்றவாளி முகம் தெரிந்தாலே அலெர்ட்.. குடியரசு தின பாதுகாப்பில் களமிறங்கும் AI கண்ணாடி!