ஸ்மார்ட் வாட்ச் வாங்கப்போறீங்களா? இதெல்லாம் இருக்கானு செக் பண்ணுங்க!
Tips to choose a smartwatch : தற்போதைய காலகட்டத்தில் வாட்ச் என்பது வெறும் மணி காட்டும் கருவி மட்டுமல்ல. பல்வேறு தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் வாட்சுகள், உடல் நலனையும் வாழ்க்கை முறையையும் மேம்படுத்தும் சக்திவாய்ந்த கருவிகளாக மாறியுள்ளன. இந்த கட்டுரையில், உங்கள் தேவைக்கு ஏற்ற சிறந்த ஸ்மார்ட்வாட்சை எப்படி தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இன்றைய தொழில்நுட்ப உலகில், வாட்ச் என்பது வெறும் நேரம் காட்டும் கருவி மட்டும் அல்ல. அவை உடல் நிலையை கண்காணிக்க, போன் பேச என பல வேலைகளை செய்யும் ஸ்மார்ட் வாட்சாக மாறியிருக்கிறது. சந்தையில் ஏகப்பட்ட வகைகளில் ஸ்மார்ட் வாட்ச்கள் (Smartwatch) கிடைக்கின்றன. ஸ்மார்ட் வாட்சுகள் நமது ஸ்மார்ட்போனுடன் Bluetooth அல்லது Wi-Fi மூலம் இணைக்கப்பட்டு அழைப்புகள், மெசேஜ்கள், நோட்டிஃபிகேஷன், மற்றும் மீடியா ஆகியவற்றை வாட்ச்சில் இருந்தே கட்டுப்படுத்த முடியும். மேலும் இதில் ஹாட் ரேட், ஸ்லீப் மானிட்டரிங் போன்ற உடல் நிலையை கண்காணிக்கும் அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த பரபரப்பான காலகட்டத்தில் நமது வேலைகளை இந்த ஸ்மார்ட் வாட்சுகள் எளிமையாக்கியிருக்கின்றன.
யாருக்கு ஸ்மார்ட்வாட்ச் தேவை?
-
உடற்பயிற்சி ஆர்வலர்கள்
-
தொழில்துறை வல்லுநர்கள்
-
தொழில்நுட்ப ஆர்வலர்கள்
-
நேர நிர்வாகம் மற்றும் உடல் நலத்தை ஒன்றாக கையாள விரும்புபவர்கள்.
ப்ரீமியம் ஸ்மார்ட்வாட்ச்களின் முக்கிய அம்சங்கள்
- ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், டைட்டானியம், சராமிக் போன்றவற்றால் தயாரிக்கப்படுவதால், இவை வலிமையானவை. பார்ப்பதற்கும் நல்ல லுக் கொடுக்கும்.
- OLED அல்லது AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டிருப்பதால் தகவல்களை துல்லியமாக பார்க்கலாம். குறிப்பாக சன் லைட்டிலும் சரியாக வேலை செய்யும். கிரிஸ்டல் கிளாஸ் போன்றவை ஸ்கிராட்ச் ஆவதில் இருந்து பாதுகாக்கின்றன.
- BLOOD OXYGEN, Heart Rate போன்ற அம்சங்கள் நமது உடல் நலனை தீவிரமாக கண்காணிக்க உதவுகின்றன.
- ஒரு முறை சார்ஜ் செய்தால் பல நாட்கள் வேலை செய்யும் திறன் கொண்டவை. இது பயணங்களிலும் அலுவலக நேரங்களிலும் பயனுள்ளதாக அமைகின்றது.
- இதில் built-in GPS, voice assistant மற்றும் third-party apps ஆதரவு போன்ற வசதிகள் நமது பெரும்பாலான வேலைகளை எளிதாக்குகின்றன.
ஸ்மார்ட் வாட்ச் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை
ஒரு ஸ்மார்ட் வாட்ச் வாங்குவதற்குப் முன், உங்கள் தேவைகள், வாழ்க்கை முறை, மற்றும் பட்ஜெட்டை வைத்து முடிவெடுக்க வேண்டும். குறிப்பாக உடற்பயிற்சி அல்லது உடல் நலனை கண்காணிக்க ஸ்மார்ட் வாட்ச் வாங்க விரும்புகிறீர்கள் என்றால் அதில் ஸ்டெப் கவுண்ட், ஹார்ட் ரேட், பிளட் ஆக்சிஜன் மானிட்டர், ஸ்லீப் டிராக்கர், ஜிபிஎஸ் போன்ற அம்சங்கள் இருக்க வேண்டும். மேலும் நோட்டிஃபிகேஷன், ஆப்ஸ், வாய்ஸ் அசிஸ்டென்ட் போன்ற வசதிகள் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். வேலையை நிர்வகிக்க வாங்குகிறீர்கள் என்றால் காலண்டர், இமெயில் அலெர்ட், என்எஃப்சி பேமெண்ட் போன்ற ஆப்சன்கள் இருக்க வேண்டும்.