இயர் பட்சில் இப்படி ஒரு சிக்கலா?.. நொடியில் எல்லாமே முடிந்துவிடும்.. எச்சரிக்கும் வல்லுநர்கள்!
Hackers Can Access Your Information Through Ear Buds | தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் இயர் பட்ஸ் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், இயர் பட்ஸ் பயன்படுத்துவதன் மூலம் ஒருவரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

மாதிரி புகைப்படம்
தற்போதைய இளைய தலைமுறையினர் இடையே பர்சில் பணம் இல்லாமல் கூட இருக்கும் ஆனால் காதில் இயர் பட்ஸ் (Ear Buds) இல்லாமல் இருக்காது. இளைய தலைமுறையினர் விரும்பி பயன்படுத்தும் ஒரு கேட்ஜெட்டாக இயர் பட்ஸ் உள்ளது. வயர்டு இயர்போன்களை பயன்படுத்துவதில் உள்ள சில சிக்கல்கள் இதில் இல்லை என்பதால் பலரும் நாள் முழுவதும் கூட இயர் பட்ஸ்களை காதுகளில் மாட்டிக்கொண்டு இருக்கின்றனர். இசை கேட்க இது சிறந்த கருவியாக கருதப்படும் நிலையில், அதில் மிகப்பெரிய சிக்கல் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தனிப்பட்ட வாழ்க்கையை வேவு பார்க்கும் கருவி
நாம் பாதுகாப்பானது என நினைத்து பயன்படுத்தும் இந்த இயர் பட்ஸ், நமது தனிப்பட்ட வாழ்க்கையை வேவு பார்க்கும் கருவியாக மாறக்கூடும் என்று சமீபத்திய ஆய்வுகள் எச்சரித்துள்ளன. இயர் பட்ஸ்களை காதில் வைத்த உடனேயே அவை ஸ்மார்ட்போன் உடன் இணைய வேண்டும் என பொதுமக்கள் விரும்பும் காரணத்தினால் நிறுவனங்கள் ஃபாஸ்ட் பேர் (Fast Pair) என்ற அம்சத்தை அறிமுகம் செய்து வருகின்றன. இந்த வசதி தான் தற்போது ஹேக்கர்களுக்கு ஜாக்பாட்டாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க : பிப்ரவரியில் அறிமுகமாகும் சாம்சங்கின் அட்டகாசமான 5 கேட்ஜெட்டுகள்!
ஃபாஸ்ட் பேர் அம்சம் மூலம் சுலபமாக தகவல்கள் ஹேக் செய்யப்படலாம்
பெல்ஜியம் நாட்டை சேர்ந்த இணைய பாதுகாப்பு வல்லுநர்கள் நடத்திய ஆய்வில் இந்த தொழில்நுட்பத்தில் உள்ள சாத்திய கூறுகளை பயன்படுத்தி ஹேக்கர்கள் பொதுமக்களின் ஸ்மார்ட்போன்களை ஹேக் செய்து, அதற்குள் இருக்கும் முக்கிய தகவல்களை திருடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஹேக்கிங்கை அவர்கள் Whisper Pair என்று அழைக்கின்றனர்.
இதையும் படிங்க : லேப்டாப்பில் இருக்கும் இந்த கீ பல வேலைகளை செய்யும்.. பலருக்கும் தெரியாத விஷயம்!
பொதுவாக ஒரு சாதனத்தை ஹேக் செய்ய அதற்கான அனுமதி தேவைப்படும். இந்த சூழல்களின் போது ஹேக்கர்கள் லிங்குகள், ஓடிபி மூலம் ஹேக் செய்வர். அனால் இயர் பட்ஸில் உள்ள இந்த அம்சத்தின் மூலம் ஹேக்கர்கள் உங்களின் அனுமதி இல்லாமலே 50 அடி தூரத்தில் இருந்துக்கொண்டே உங்கள் ஸ்மார்ட்போன் உள்ளிட்ட இயர் பட்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும் சாதனங்களை மிக சுலபமாக ஹேக் செய்ய முடியும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.