கூகுள் மேப்ஸில் இருக்கும் இந்த ஆப்சன்ஸ் பத்தி தெரியுமா ? உங்கள் பயணம் எளிதாகும்!

Smart Travel Tips : கூகுள் மேப் நமது பயணங்களை எளிதாகவும் விரைவானதாகவும் மாற்றியிருக்கிறது. தெரியாத இடங்களுக்கு பயணிக்கும் போது நமது இலக்கை அடைய உதவுவதுடன், நாம் செல்லும் பாதையில் டிராஃபிக் அதிகம் இருந்தால் அதையும் முன் கூட்டியே அறிவுறுத்தும். இந்த கட்டுரையில் கூகுள் மேப்ஸின் பிற பயன்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

கூகுள் மேப்ஸில் இருக்கும் இந்த ஆப்சன்ஸ் பத்தி தெரியுமா ? உங்கள் பயணம் எளிதாகும்!

மாதிரி புகைப்படம்

Published: 

22 Jun 2025 22:30 PM

 IST

கூகுள் மேப்ஸ் அம்சங்கள் நமது தினசரி பயணங்களை எளிதாக மாற்றியிருக்கிறது. முன்பு எல்லாம் புதிதாக ஒரு இடத்துக்கு போக வேண்டும் என்றால் வழி கேட்டு, கேட்டு போவதற்குள் பாதி நேரம் முடிந்து விடும். அந்த வகையில் கூகுள் மேப் பயன்பாடு மிகவும் எளிதாக மாற்றியிருக்கிறது. புதிதாக ஒரு இடத்துக்கு போதவற்கான வழியை மட்டும் காட்டுவதில்லை, போகும் வழியில் டிராஃபிக் இருந்தால் அதனையும் நமக்கு சுட்டிக்காட்டும். கூகுள் மேப்பை சரியாக பயன்படுத்தினால் நமது வேலை எளிதாக மாறும்.  கூகுள் மேப் வழங்கும் சில அம்சங்கள் குறித்து மக்களுக்கு தெரிவதில்லை. முன்பு போல் வீட்டுக்கு வர ஒருவருக்கு வழி சொல்லி கஷ்டப்பட தேவையில்லை. உங்கள் லோகேஷனை கூகுள் மேப் வாயிலாக, சம்மந்தப்பட்ட அனுப்பி வைத்தால் போதும்.  இப்படி கூகுள் மேப்ஸினால் நமக்கு பல நன்மைகள் இருக்கின்றன.

டிராஃபிக் குறித்த தகவல்

கூகுள் மேப்ஸ்  நேரடியாக டிராஃபிக் சம்மந்தமான தகவல்களை அனுப்புகிறது. இதன் மூலம் டிராஃபிக் குறைவாக இருக்கும் மாற்று வழிகளைத் தேர்ந்தெடுத்து பயணிக்க முடியும். இதன் மூலம் நீங்கள் செல்ல விரும்பும் இடத்துக்கு விரைவில் செல்லலாம்.  கூகுள் மேப்பில் பச்சை நிறம் பாதை பாதையில் டிராஃபிக் இல்லை என்பதை காட்டுகிறது.  அதே போல ஆரஞ்சு நிறம் என்றால் கொஞ்சம் டிராஃபிக் இருக்கிறது எனவும், சிவப்பு நிறம் இருந்தால் போக்குவரத்து நெரிசல் இருக்கிறது எனவும் பொருள்.

வாய்ஸ் அசிஸ்டென்ட் வசதி

வாகனம் ஓட்டும்போது ஸ்கிரீனைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. கூகுள் மேப்ஸ் குரல் மூலம் நாம் பயணிக்க வேண்டிய திசைகளை தெரிந்துகொள்ளலாம். அதைப் பயன்படுத்தி நம் வழியை தெரிந்து கொண்டு பயணிக்கலாம். இதனால் நமது கவனம் சாலையிலேயே இருக்கும். விபத்துகளும் தவிர்க்கப்படும்.

வீடு மற்றும் அலுவலங்களின் முகவரிகளையே சேமிக்கலாம்

நம் வீடு மற்றும் அலுவலகங்கள் என அடிக்கடி பயணிக்கும் முகவரிகளையே இதில் சேமித்து வைக்கலாம். இதனால் ஒவ்வொரு முறையைும் முகவரியை பதிவிட தேவையில்லை. வீடு அல்லது அலுவலகம் என்று தேடுவதன் மூலம் நாம் செல்ல வேண்டிய எடத்துக்கு எளிதில் செல்லலாம். இதனால் நம் வேலை எளிதாகும்.

கூகுள் மேப்ஸில் உள்ள சிறப்பம்சங்கள்

  • புதிதாக ஒரு இடத்துக்கு செல்லும்போது அங்கே அருகில் உள்ள பெட்ரோல் பங்க், ஏடிஎம், மருத்துவமனை, ஹோட்டல் போன்றவற்ற தேடி அலைவதில் சிரமம் இருக்கும். தற்போது அந்த அந்த வேலையையும் கூகுள் மேப் எளிதாக்குகிறது. கூகுகள் மேப்ஸில் ரெஸ்டாரண்ட் என டைப் செய்தால் அருகில் இருக்கும் ரெஸ்டாரண்ட்கள் உங்களுக்கு காட்டப்படும். அதில் உங்களுக்கு விருப்பமானவற்றை தேர்ந்தெடுக்கலாம்.
  • உங்கள் போனில் நெட் இல்லையென்றால் ஆஃப்லைன் மேப் மூலம் நீங்கள் பயணிக்க வேண்டிய இடத்தின் வழியைப் பார்க்கலாம். இதற்கு கூகுள் மேப்பில் உள்ல செட்டிங்க்ஸ் பகுதியில் ஆஃப்லைன் மேப் என்பதை தேர்ந்தெடுக்கவும். நீங்கள் இருக்கும் இடம், மற்றும் செல்ல வேண்டிய இடம் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து மேப்பை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
  • உங்கள் லொகேஷனை பகிரும் ஆப்சன் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்கள் வீட்டுக்கு வருபவர்கள் வழி தெரியாமல் தடுமாறாமல் இருக்க இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும்.
அதிகரித்து வரும் தங்க குத்தகை.. என்ன காரணம்?
மக்களை காக்கும் வவ்வால்கள் - கிராம மக்களின் விசித்திர நம்பிக்கை
உங்கள் அறையின் ஓரத்தில் நிற்பது பேயல்ல. அது ஸ்லீப் பேரலிசிஸ்!
ஏலியனுடன் தொடர்பில் இருந்த ஜார்ஜ் புஷ்? அமேசான் பிரைம் ஆவண படத்தால் சர்ச்சை