கடைசி நாளில் ஆஃபர்களை வாரி வழங்கும் ஃபிளிப்கார்ட்… ஸ்மார்ட் டிவி முதல் லேப்டாப் வரை… அதிரடி தள்ளுபடியில் விற்பனை
Flipkart Big Billion Days : பிளிப்கார்ட் பிக் பில்லியன் நாட்கள் விற்பனை அக்டோபர் 2, 2025 இன்றுடன் முடிவடைகிறது. விற்பனையின் கடைசி நாளில் பல சிறப்பான சலுகைகளை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. குறைந்த விலையில் பொருட்களை வாங்குவதன் மூலம் பணத்தை சேமிக்க விரும்புபவர்களுக்கு கடைசி வாய்ப்பு.

மாதிரி புகைப்படம்
கடந்த சில நாட்களாக நடந்து வரும் ஃபிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் (Flipkart Big Billion Days) விற்பனை அக்டோபர் 2, 2025 இன்றுடன் முடிவடைகிறது. இந்த ஃபிளிப்கார்ட் விற்பனை இன்று நள்ளிரவு 12 மணிக்கு முடிவடைகிறது. இந்த சிறந்த விற்பனையை மக்கள் பயன்படுத்திக் கொள்ள இன்று ஒரு நாள் மட்டுமே உள்ளது. விற்பனையில் நமக்குத் தேவையான நல்ல சலுகைகளை இன்று நள்ளிரவு வரை நம்மால் பெற முடியும். குறிப்பாக ஸ்மார்ட் டிவிகள் முதல் ஸ்மார்ட்போன்கள் வரை, பிளிப்கார்ட் விற்பனையில் சில சிறந்த சலுகைகள் உள்ளன. விற்பனையின் கடைசி நாளில் சில சிறந்த சலுகைகள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
ஃபிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ்
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை செப்டம்பர் 23, 2025 அன்று தொடங்கியது. அந்த நேரத்தில், நிறுவனம் முடிவு தேதியை குறிப்பிடவில்லை. இருப்பினும், பிளிப்கார்ட் இணைய பக்கத்தில் இப்போது விற்பனை இன்றிரவு அதாவது அக்டோபர் 2, 2025 அன்றுடன் முடிவடைகிறது என குறிப்பிட்டுள்ளது. அதாவது விற்பனை சலுகைகளைப் பெற உங்களுக்கு ஒரு நாள் மட்டுமே உள்ளது.
இதையும் படிக்க : அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்.. அசத்தல் தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படும் லேப்டாப்கள்!
கடைசி நாளில் ஃபிளிப்கார்ட்டில் கிடைக்கும் சலுகைகள்
ஃபிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் கடைசி நாளில் சில சிறந்த சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கின்றன.
- அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று 32 அங்குல ஸ்மார்ட் டிவி. சாம்சங்கின் 32 அங்குல ஸ்மார்ட் டிவி வெறும் ரூ.10,116க்கு கிடைக்கிறது. இதனால் குறைந்த விலையில் அதிக வசதிகளுடன் பிராண்டட் டிவி வாங்க நினைப்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
- கூடுதலாக, ஆப்பிளின் ஸ்மார்ட்வாட்சை ரூ.16,249 முதல் வாங்கலாம். இது தவிர, ஹோரியின் டாப்-ஆஃப்-தி-லைன் பைக்குகள் (Hori’s top-of-the-line bikes) ரூ. 50,429 முதல் இந்த விற்பனையில் கிடைக்கின்றன.
- ஃபிளிப்கார்ட் விற்பனையின் கடைசி நாளில் ஆசஸ் கிரியேட்டர் 3050 லேப்டாப் ரூ.49,990க்கு கிடைக்கிறது. மேலும், வைஃபை பிரிண்டர்களை ரூ.27,999 முதல் வாங்கலாம். வாட்டர் ப்யூரிஃபையர்களில் ரூ.3,000 வரை தள்ளுபடி கிடைக்கும்.
இதையும் படிக்க : அமேசான் Vs பிளிப்கார்ட் சேல்.. ரூ.10,000-க்கு கீழ் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்கள்.. லிஸ்ட் இதோ!
பிராண்டட் ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கும் சலுகைகள்
- ஸ்மார்ட்போன்களைப் பொறுத்தவரை, விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.18,999 முதல் கிடைக்கிறது.
- மேலும் ஹைலைட்டாக ஐபோன் 16 இன்று ரூ. 53,999க்கு வாங்கலாம்.
- ரியல்மி 15 புரோ ஸ்மார்ட்போன் ரூ.26,999க்கு கிடைக்கிறது.
- மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.24,999 என்ற விலைக்கும், மோட்டோ ஜி96 ஸ்மார்ட்போன்ரூ.14,999 என்ற விலைக்கும், மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் ஸ்மார்ட்போன் ரூ.19,999 என்ற விலைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- ஆக்சிஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இந்த விற்பனையில் கூடுதலாக 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.