GPS : ஜிபிஎஸ் மூலம் ஒருவர் என்ன செய்கிறார் என்பதை தெரிந்துக்கொள்ள முடியும்.. எச்சரிக்கும் ஐஐடி ஆய்வு!
GPS Reveals More Information Than Location | பெரும்பாலான நபர்கள் ஜிபிஎஸ் என்பது லொகேஷனை கண்டுபிடிக்க மட்டும் என்று நினைத்துக்கொண்டு உள்ளனர். ஆனால், ஜிபிஎஸ் மூலம் லொகேஷன் மட்டுமன்றி ஒருவர் எங்கு இருக்கிறார், அவர் என்ன செய்கிறார் என்பது குறித்த தகவல்களையும் தெரிந்துக்கொள்ளலாம் என்று ஐஐடியின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மாதிரி புகைப்படம்
ஜிபிஎஸ் (GPS – Global Positioning System) நாம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வது, ஆன்லைனில் ஆடர்டர் செய்த பொருட்களை டிராக் செய்வது ஆகியவற்று மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால், ஜிபிஎஸ் மூலம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் சேகரிக்கப்படும் தகவல்கள் லொகேஷன் மட்டுமன்றி அந்த ஸ்மார்ட்போனை வைத்திருக்கும் நபர் என்ன செய்துக்கொண்டு இருக்கிறார், அவர் எந்த இடத்தில் உள்ளார் என்பது உள்ளிட்ட பல கூடுதல் மற்றும் முக்கியமான தகவல்களை வழங்குவதாக டெல்லி ஐஐடியின் (IIT – Indian Institute of Technology) சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜிபிஎஸ்-ல் இத்தனை சிறப்பு அம்சங்கள் உள்ளனவா?
டெல்லி ஐஐடி சமீபத்தில் ஆண்ட்ரோகான் (AndroCon) என்ற இந்த ஆய்வை மேற்கொண்டது. இதன் மூலம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் சென்சார் எவ்வாறு ஜிபிஎஸ்-ஐ விட சிறப்பாக செயல்படுகிறது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் இருக்கும் செயலிகளுக்கு ஏற்கனவே இருப்பிடத்திற்கான அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாகப்வும் அது ரகசிய சென்சார் போல செயல்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : OnePlus 15 : அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமான ஒன்பிளஸ் 15.. முழு விவரம் இதோ!
ஜிபிஎஸ் பாராமீட்டர்களை சோதனை செய்த ஆண்ட்ரோகான்
இந்த ஆண்ட்ரோகான் ஆய்வு ஸ்மார்ட்போனின் கேமரா, மைக்ரோபோன், மோஷன் சென்சார் ஆகியவற்றை எதையும் பயன்படுத்தாமல் ஜிபிஎஸ் பாராமீட்டர்களை மையமாக கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. டோப்லர் ஷிஃப்ட் (Doppler Shift), சிக்னல் பவர் (Signal Power) ஆகிய அம்சங்கள் மூலம் ஒருவர் அமர்ந்துக்கொண்டு இருக்கிறாரா, நின்றுக்கொண்டு இருக்கிறாரா, அறைக்குள் இருக்கிறாரா அல்லது வெளியே இருக்கிறாரா என்பது உள்ளிட்ட தகவல்களை தெரிந்துக்கொள்ள பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : இனி ஏஐ மூலம் உங்கள் இன்ஸ்டா ஸ்டோரியை மாஸாக மாற்றலாம்.. எப்படி?
லொகேஷன் மட்டுமில்ல – மேலும் பல தகவல்களை தெரிந்துக்கொள்ளலாம்
ஜிபிஎஸ் லொகேஷனை மட்டுமன்றி, அந்த அறை கூட்டமாக உள்ளதா அல்லது கூட்டம் குறைவாக உள்ளதா என்பது வரை கண்டறிய உதவுதாக கூறப்படுகிறது. ஒரு ஆண்டுக்கும் மேலாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 40,000 சதுர கிலோ மீட்டர்கள் பல ஸ்மார்ட்போன்கள் மூலம் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ஆண்ட்ரோகான் 99 சதவீதம் இடத்தை துல்லியமாக கணித்ததாகவும், 87 சதவீதம் துல்லியமாக மனிதர்களின் செயல்களை கணித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆய்வின் மூலம் ஜிபிஎஸ் பயன்படுத்தி லொகேஷன் மட்டுமன்றி மேலும் பல கூடுதலான தகவல்களை தெரிந்துக்கொள்ள முடியும் என்பதை டெல்லி ஐஐடி உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.