Gmail : ஜிமெயிலில் தேவையற்ற மின்னஞ்சல்களை மொத்தமாக டெலிட் செய்வது எப்படி?

Gmail Inbox Clearing | பெரும்பாலான மக்கள் தகவல் பரிமாற்றத்திற்காக கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் செயலியை பயன்படுத்துகின்றனர். ஜிமெயில் செயலியில் மிக சுலபமாக ஸ்டொரேஜ் தீர்ந்துவிடும் நிலையில், தேவையற்ற மின்னஞ்சல்களை மொத்தமாக டெலிட் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

Gmail : ஜிமெயிலில் தேவையற்ற மின்னஞ்சல்களை மொத்தமாக டெலிட் செய்வது எப்படி?

மாதிரி புகைப்படம்

Published: 

02 Apr 2025 16:36 PM

 IST

தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் (Technology Development) தகவல் தொலைத்தொடர்பு (Communication) மிக வேகாம மாறியுள்ளது. முன்பெல்லாம் ஒருவருக்கு ஒரு தகவலை பகிர வேண்டும் என்றால் அதற்கு குறிப்பிட்ட கால நேரம் தேவைப்படும். ஆனால், தற்போது அதற்கெல்லாம் தேவையே இல்லை. தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக ஒருவர் மற்றொருவரை மிக எளிதாக தொடர்புக்கொள்ள முடியும்.

உலக அளவில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் ஜிமெயில்

பக்கத்து ஊரில் இருப்பவர்கள் முதல் உலகின் எந்த மூலையில் இருக்கும் நபர்களையும் ஒரு நொடி பொழுதில் தொடர்புக்கொள்ள முடியும். இதற்காக பல தொலைத்தொடர்பு செயலிகள் உள்ளன. அந்த வகையில், உலக அளவில் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் தொலைத்தொடர்பு செயலி தான் கூகுள் (Google) நிறுவனத்தின் ஜிமெயில் (Gmail). ஜிமெயில் செயலியை பயன்படுத்தி ஒருவரை மிக எளிதாக தொடர்ப்புக்கொள்ள முடியும்.

ஜிமெயில் செயலியை உலகில் உள்ள பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுடன் வேலை தொடர்பான தகவல்களை பகிர்ந்துக்கொள்ள பயன்படுத்தப்படுகின்றன. தொலைத்தொடர்பு செயலிகள் மூலம் தகவல் திருடப்படுவதற்கான வாய்ப்பு உள்ள நிலையில், ஜிமெயில் சற்று பாதுகாப்பான செயலியாக கருதப்படுகிறது. பயனர்களின் தகவல்களை பாதுகாக்கும் நோக்கில் கூகுள் நிறுவனமும் அவ்வப்போது பல பாதுகாப்பு அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது.

ஜிமெயிலில் ஸ்டோரேஜ் பிரச்சனையை சந்திக்கும் பயனர்கள்

ஜிமெயில் செயலியில் பாதுகாப்புக்காக சில அம்சங்கள் இருந்தாலும் பெரும்பாலான பயனர்கள் ஸ்டோரேஜ் பிரச்சனையை எதிர்க்கொள்கின்றனர். கூகுள் நிறுவனம் ஜிமெயிலுக்காக மொத்தம் 15 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதில் ஜிமெயில், கூகுள் டிரைவ் மற்றும் கூகுள் போட்டோஸ் உள்ளிட்ட அனைத்திற்கும் சேர்த்தே இந்த 15 ஜிபி தான் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக மிக சுலபமாக ஜிமெயில் ஸ்டோரேஜ் தீர்ந்துவிடும் வாய்ப்பு உள்ளது.

நாள்தோறும் பணி செய்யும் இடங்களில் இருந்து வரும் மின்னஞ்சல்கள், அதுமட்டுமன்றி எந்த ஒரு செயலியை பயன்படுத்தினாலும் அதற்கான குறுஞ்செய்திகள், வங்கி பரிவர்த்தனை தொடர்பான தலவல்கள் என அனைத்து ஜிமெயிலுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இதன் காரணமாக, ஜிமெயிலில் மிக வேகமாக ஸ்டோரேஜ் தீர்ந்துவிடுகிறது. இதற்காக அவ்வபோது மின்னஞ்சல்களை டெலிட் செய்வதற்கான தேவை ஏற்படுகிறது. இந்த நிலையில், ஜிமெயிலில் மொத்தமாக மின்னஞ்சல்களை டெலிட் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

தேவையற்ற மின்னஞ்சல்களை மொத்தமாக டெலிட் செய்வது எப்படி?

  1. அதற்கு முதலில் கூகுள் குரோமில் உங்கள் ஜிமெயில் செயலியை திறந்து வைத்துக்கொள்ளுங்கள்.
  2. அதில் இன்பாக்ஸை (Inbox) கிளிச் செய்து அதில் Unsubscribe  என்பதை தேடுங்கள்.
  3. இப்போது விளம்பரங்கள் தொடர்பான, உங்களுக்கு முக்கியமில்லாத மின்னஞ்சல்கள் தோன்றும்.
  4. இந்த அனைத்து மின்னஞ்சல்களையும் டெலிட் செய்ய வலது பக்கத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள சின்ன கட்டத்தை கிளிக் செய்ய வேண்டும்.
  5. இது அந்த பக்கத்தில் இருக்கும் அனைத்து குறுஞ்செய்திகளையும் தேர்வு செய்யும்.
  6. மின்னஞ்சல்கள் தேர்வு செய்யப்பட்ட பின்னர் டெலிட் செய்வதற்கான குறியீடை கிளிக் செய்து மொத்தமாக மின்னஞ்சல்களை டெலிட் செய்யலாம்.

மேற்குறிப்பிட்ட இந்த நடைமுறையை பின்பற்றி உங்கள் மின்னஞ்சல் செயலியில் உள்ள தேவையற்ற மின்னஞ்சல்களை மொத்தமாக டெலிட் செய்து விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..