ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோவுக்கு அசத்தல் தள்ளுபடி.. வெறும் ரூ.79,000-க்கு வாங்கலாம்!

Apple iPhone 16 Pro Offer | 2024 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த நிலையில், அந்த ஸ்மார்ட்போன் ரூ.36,000 தள்ளுபடியில் மிக குறைந்த விலையில் ஜியோமார்டில் விற்பனை செய்யப்படுகிறது.

ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோவுக்கு அசத்தல் தள்ளுபடி.. வெறும் ரூ.79,000-க்கு வாங்கலாம்!

ஐபோன் 16 ப்ரோ

Updated On: 

20 Apr 2026 23:02 PM

 IST

உலக அளவில் அதிக மக்களால் விரும்பி பயன்படுத்தப்படும் ஸ்மார்ட்போன் (Smartphone) நிறுவனமாக ஆப்பிள் (Apple) உள்ளது. இந்த வகையில், இந்திய சந்தையிலும் ஆப்பிள் ஸ்மார்ட்போன்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும். சிறந்த அம்சங்கள் மற்றும் செயல்திறன்களை கொண்டுள்ளதன் காரணமாக ஆப்பிள் ஐபோன்களை பலரும் விரும்பி பயன்படுத்துகின்றனர். ஆனால், அனைவராலும் ஆப்பிள் ஐபோன்களை வாங்கி பயன்படுத்த முடிவதில்லை. காரணம், அவற்றின் விலை தான். இத்தகைய சூழலில் தான் ஆப்பிளின் ஐபோன் 16 ப்ரோ ஸ்மார்ட்போன் (Apple 16 Pro Smartphone) அசத்தலான தள்ளுபடியில் வெறும் ரூ.79,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த சிறப்பு தள்ளுபடி குறித்து விரிவாக பார்க்கலாம்.

வெறும் ரூ.79,900-க்கு விற்பனை செய்யப்படும் ஆப்பிள் 16 ப்ரோ

மற்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை விடவும் ஆப்பிளின் ஸ்மார்ட்போன்கள் சற்று விலை உயர்வானவையாக இருக்கும். இதனால், பலருக்கு ஆப்பிள் ஐபோன் வாங்குவது கனவாகவே இருக்கும். ஆனால், தற்போது அதற்கான அவசியம் இல்லை. காரணம், ஜியோமார்டில் ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு அசத்தல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதனை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வெறும் ரூ.79,900-க்கே வாங்கிக்கொள்ள முடியும்.

இதையும் படிங்க : ஏஐ மனிதர்களின் சிந்திக்கும் திறனை குறைத்துவிடும்.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

ஆப்பிள் நிறுவனம் 2024 ஆம் ஆண்டு அறிமும் செய்த ஆப்பிள் ஐபோன் 16 சீரீஸில் அதிக தரம் கொண்ட ஸ்மார்ட்போனாக இந்த ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோ அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் அப்போது ரூ.1,19,900-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது அசத்தல் தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகிறது.

ரூ.36,000 தள்ளுபடி வழங்கும் ஜியோமார்ட்

ரூ.1,19,900 மதிப்பிலான ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோ ஜியோமார்டில் வெறும் ரூ.83,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஜியோமார்ட் இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.36,000 தள்ளுபடி வழங்குகிறது. அதுமட்டுமன்றி, இந்த ஸ்மார்ட்போனை வாங்குபவர்களுக்கு ரூ.5,400 வங்கி சலுகையும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ரூ.1,19,900 மதிப்புள்ள இந்த ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோவை வெறும் ரூ.79,000-க்கே வாங்கிக்கொள்ள முடியும். பல நாட்கள் ஆப்பிள் ஐபோன் வாங்க வேண்டும் என நினைத்துக்கொண்டு இருந்தவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..