கழிவறையிலும் வந்துவிட்டது செயற்கை நுண்ணறிவு அம்சம்.. பயன் என்ன?
Artificial Intelligence Toilet to Come in Real Life | செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் ஆதிக்கம் அனைத்து துறைகளிலும் உள்ளது. இந்த நிலையில், கழிவறையிலும் செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் ஆதிக்கம் தொடங்கியுள்ளது. இந்த அம்சத்தின் சிறப்புகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
தற்போதைய காலக்கட்டத்தில் செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) தொழில்நுட்பம் நுழையாத இடங்களே கிடையாது. அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு அம்சம் பயன்படுத்தப்பட தொடங்கிவிட்டது. ஏன் தனிமனிதர்கள் கூட தங்களது அன்றாட வாழ்வில் செயற்கை நுண்ணறிவு அம்சத்தை அதிகம் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இவ்வாறு செயற்கை நுண்ணறிவி அம்சம் மனிதர்களின் வாழ்வோடு ஒன்றிணைந்துள்ள நிலையில், கழிவறையிலும் தற்போது செயற்கை நுண்ணறிவு அம்சம் அறிமுகமாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கழிவறையிலும் அறிமுகமான செயற்கை நுண்ணறிவு அம்சம்
மனிதனின் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் பங்கு உள்ளது. அந்த வகையில், மனித உடல் சீராக இயங்க குடல் ஆரோக்கியம் முக்கியம். குடல் ஆரோக்கியம் சிறப்பானதாக இல்லை என்றால் பல உடல்நல பிரச்னைகளை சந்திக்க நேரிடும். எனவே குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உடற்பயிற்சிகள் மற்றும் உணவு பழக்கங்களை பின்பற்ற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை வழங்குகின்றனர். ஆனால், குடல் ஆரோக்கியத்தை தினமும் கண்காணிக்க முடியாத சூழ்நிலை தான் பெரும்பாலான நபர்களுக்கு உள்ளது. இந்த நிலையில், குடல் ஆரோக்கியத்தை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு அம்சத்துடன் கூடிய கழிவறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : வாட்ஸ்அப்பில் தொல்லை கொடுக்கும் ஸ்பேஸ் மெசேஜ்கள்.. புதிய தீர்வை அறிமுகம் செய்யும் மெட்டா!
செயற்கை நுண்ணறிவு கழிவறையில் அப்படி என்ன சிறப்பு அம்சங்கள் உள்ளன
இந்த செயற்கை நுண்ணறிவு அம்சத்துடன் கூடிய கழிவறையில் சாதாரண கழிவறையை விடவும் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. அதாவது, இந்த செயற்கை நுண்ணறிவு கழிவறையில் (Artificial Intelligence Toilet) சிறப்பு சென்சார், கேமரா, வாயு பகுப்பாய்வு ஆகிய சிறப்பு அம்சங்கள் உள்ளன. இந்த கழிவறையை பயன்படுத்தும் நபர்களின் சிறுநீர் மற்றும் மலம் துல்லியமாக ஆய்வு செய்யப்பட்டு அவற்றின் நிறம், வடிவம், அடர்த்தி, வாயுக்கள் மற்றும் தாதுக்கள் போன்ற விவரங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. அந்த தரவுகளை கணினி நுண்ணறிவு செயலி ஆய்வு செய்து, உடலில் ஏற்படும் சிறிய சிறிய மாற்றங்களை முன்கூட்டியே கணிக்க உதவும்.
இதையும் படிங்க : iQOO 15 : அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமான iQOO 15 ஸ்மார்ட்போன்!
மனிதர்களுக்கு ஏற்படும் குடல் சார்ந்த உடல்நல சிக்கல்களை தடுக்கவும், நோய்களை முன்கூட்டியே கணிக்கவும் இந்த செயற்கை நுண்ணறிவு கழிவறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.