தவறாக இருந்தாலும் ஏஐ சாட்பாட்கள் உங்கள் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
Shocking Study Reveals Dangers of AI | தற்போதைய காலக்கட்டத்தில் அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில், செயற்கை நுண்ணறிவு சாட்பாட்களை பயன்படுத்துவதன் மூலம் மிகப்பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

மாதிரி புகைப்படம்
செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) அம்சம் உலக அளவில் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதன் காரணமாக தற்போது அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாக பொதுமக்களும் தங்களது அன்றாட வாழ்வில் செயற்கை நுண்ணறிவு அம்சத்தை பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலான நபர்கள் தங்களது அன்றாட வாழ்வில் ஏஐ சாட்பாட்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், ஏஐ சாட்பாட்கள் குறித்து ஆய்வுகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஏஐ சாட்பாட்டுகளை அதிகம் பயன்படுத்தும் பொதுமக்கள்
தற்போதைய காலக்கட்டத்தில் பலரும் ஏஐ சாட்பாட்களை பயன்படுத்துகின்றனர். அதனை பயன்படுத்தி தங்களது சந்தேகங்களை தீர்ப்பது, கேள்விகளை எழுப்புவது, கடினமான வேலைகளை மிகவும் சுலபமானதாக மாற்றுவது உள்ளிட்டவற்றை செய்கின்றனர். மேலும் சிலர் ஏஐ சாட்பாட்களை தங்களது தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்துகின்றனர். குறிப்பாக தங்களது மன கவலைகளை பகிர்ந்துக்கொள்வது, கோபத்தை பகிர்ந்துக்கொள்வது ஆகியவற்றை செய்கின்றனர். இந்த நிலையில், தான் ஏஐ சாட்பாட்கள் குறித்து இந்த அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : UPI : யுபிஐ-ல் வருகிறது ஏஐ.. இனி இந்த சிக்கல்களுக்கு சுலபமாக தீர்வு காணலாம்!
தவறாக இருந்தாலும் ஏஐ சாட்பாட்கள் உங்கள் கருத்து ஆதரவு தெரிவிக்கும்
ஏஐ சாட்பார்ட்கள் தங்களது மனதின் சித்தனைகளுக்கு ஏற்றவாறு விடைகளை வழங்கும் நிலையில், பலரும் அதனை தங்களது சந்தேகங்கள் மற்றும் தனிப்பட்ட குழப்பங்களை தீர்த்துக்கொள்ளும் கருவிகளாக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், ஏஐ சாட்பாட்கள் அவ்வாறு பதில் அளிப்பதில் பெரிய சிக்கல் உள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. காரணம், ஏஐ சாட்பாட்கள் அதனை பயன்படுத்தும் நபர் தவறான கருத்துக்களை கொண்டு இருந்தாலும் அதனை ஆதரிக்கும் விதமாக கருத்துகளை பகிரும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : கழிவறையிலும் வந்துவிட்டது செயற்கை நுண்ணறிவு அம்சம்.. பயன் என்ன?
அதாவது இந்த ஏஐ சாட்பாட்கள் பயனர்கள் அதனிடம் இருந்து என்ன கேட்க விரும்புகின்றார்களோ அத்தகைய கருத்துக்களை பகிருமாம். அந்த நபரின் சிந்தனை மற்றும் கொள்கை தவறானதாக இருந்தாலும் அதனை ஆதரித்து அது சரிதான் என்பது போல கருத்துக்களை கூறுமாம். பயனர்கள் மீண்டும் மீண்டும் ஏஐ சாட்பாட்டுகளை பயன்படுத்தும் வகையில் அந்த சாட்பாட்கள் செயல்படும் என்று ஆய்வு முடிவுகள் கூறியுள்ளது. ஏஐ சாட்பாட்களின் இத்தகைய ஆபத்தான அம்சங்கள் குற்ற செயல்களை அதிகரிக்க கூடும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.