மாணவிக்கு கத்திக்குத்து.. தந்தை கண்முன்னே இளைஞர் செய்த கொடூரம்.. அதிர்ந்த ராணிப்பேட்டை!
Ranipet Crime News : ராணிப்பேட்டை மாவட்டத்தில் கல்லூரி மாணவியை, இளைஞர் கத்தியால் குத்தி உள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக மாணவியை ஒருதலையாக காதலித்து வந்த நிலையில், தந்தை கண்முன்னே சரமாரியாக குத்தியுள்ளார். இதில், அந்த மாணவியின் கழுத்து, மார்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

கத்தியால் குத்திய இளைஞர்
ராணிப்பேட், ஜூலை 26 : ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாணவியை இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தந்தை கண்முன்னே, இளைஞர் மாணவியை கத்தியால் குத்தி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த மாணவிக்கு மருத்துவமனைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது சம்பந்தமான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் நடக்கும் கொலை சம்பவங்கள் மாநிலத்தையே உலுக்கி வருகிறது. குறிப்பாக, பெண்கள், குழந்தைகள், சிறுமிகள் கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. இதனை தடுக்க மாநில அரசும் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. அப்படியொரு சம்பவம் தான் ராணிப்பேட்டையில் தற்போது நடந்துள்ளது.
மாணவிக்கு கத்திக்குத்து
அதாவது, கல்லூரி மாணவியை, இளைஞர் கத்தியால் குத்தியுள்ளார. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயவேல். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகள் 19 வயதான கிருதிகா. இவர் விளாப்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் கவியரசு. இவர் மாணவி கிருதிகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக கிருத்திகாவை காதலிப்பதாக கூறி, அவரை பின்தொடர்ந்துள்ளதாக தெரிகிறது.
Also Read : 2 குழந்தைகளை கொன்ற அபிராமி.. சாகும் வரை ஆயுள் தண்டனை.. நீதிமன்றம் தீர்ப்பு
இதுகுறித்து கிருத்திகா பலமுறை கவியரசுவிடம் கூறியதாக தெரிகிறது. தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என கூறியதாக தெரிகிறது. இருப்பினும், கிருத்திகாவை ஒருதலையாக கவியரசு காதலித்து வந்துள்ளார். ஆனால், கிருத்திகா காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.
தந்தை கண்முன்னே இளைஞர் செய்த கொடூரம்
இந்த நிலையில், 2025 ஜூலை 25ஆம் தேதியான நேற்று மாலை தந்தை ஜெயவேல் தனது மகள் கிருத்திகாவை அழைத்து கொண்டு கல்லூரியில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டு சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, இவர்களை வழிமறித்த கவியரசு, கிருத்திகாவை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.
இதில் கிருத்திகாவை ரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடனே கவியரசு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியான தந்தை, உடனே கிருத்திகாவை அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கிருத்திகாவை கழுத்து, மார்பில் குத்தியால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடி வருகிறார்.
Also Read : சிவகங்கை: தம்பதி ஒரே சேலையில் விபரீத முடிவு.. அனாதையான 3 குழந்தைகள்..!
இதுகுறித்து வாழப்பந்தல் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இளைஞர் கவியரசுவை தேடி வருகின்றனர். தனது காதலுக்கு சம்மதம் தெரிவிக்காததால், மாணவியை, கவியரசு கத்தியால் குத்தியதாக போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.