சாத்தான்குளத்தில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை…4 தனிப்படைகள் அமைப்பு…போலீசார் விசாரணை!!
Youth Hacked To Death In Sathankulam: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் இரு இளைஞர்களால் ஒருவர் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்காக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கொலை சம்பவத்தை கண்டித்து சாலை மறியல் நடைபெற்றது.

சாத்தான்குளத்தில் இளைஞர் வெட்டி கொலை
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் சுடலைமுத்து (25). கூலித் தொழிலாளியான இவர், இன்று வெள்ளிக்கிழமை ( டிசம்பர் 19) காலை தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அன்று வந்த இரவு வாலிபர்கள் சுடலைமுத்துவிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில், அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் ஆத்திரமடைந்த அந்த இரு வாலிபர்களும் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சுடலைமுத்துவை வெட்ட முயன்றனர். உடனே, சுடலைமுத்து அவர்களிடமிருந்து தப்பி ஓடினார். இருப்பினும், அந்த இரு வாலிபர்களும் சுடலை முத்துவை நடுரோட்டில் பட்டப் பகலில் ஓட ஓட விரட்டி அரிவாளால் கொடூரமாக வெட்டிக் கொண்டனர்.
இளைஞரின் உறவினர்கள் சாலை மறியல்
இதில், சுடலைமுத்து பரிதாபமாக உயிரிழந்தார். அந்த இரு வாலிபர்களும் இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது, சுடலை முத்துவின் உறவினர்கள் சடலத்தை எடுக்க விடாமல் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், சுடலைமுத்துவின் படுகொலைக்கு நியாயம் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க: சென்னையில் பிட்புல், ராட்வீலர் நாய்களுக்கு தடை… மீறி வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்: சென்னை மாநகாரட்சி
கொலையாளிகளை உடனே பிடிப்பதாக உறுதி
அப்போது, இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்யக்கோரி முழக்கங்களை எழுப்பினர். சாத்தான்குளம் (பொ) டிஎஸ்பி ராமச்சந்திரன் மற்றும் திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ் குமார், காவல் ஆய்வாளர் ஸ்டீபன் ராமச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு இடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அப்போது, குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்று கூறியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு
இதன் பின்னர் கொலையுண்ட சுடலைமுத்துவின் சடலம் அவசர ஊர்தி மூலம் உடல் கூராய்வுக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த கொலை சம்பவம் குறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைப்பு
இந்த கொலை சம்பவம் முன்விரோதன் காரணமாக நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சுடலைமுத்துவை கொலை செய்த இரு வாலிபர்களை பிடிப்பதற்காக நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சாத்தான்குளத்தில் பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: திருப்பரங்குன்றத்தில் தீ குளித்தவரின் உயிரிழப்புக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும்…நயினார் நாகேந்திரன்!