எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது.. வாழ்த்து சொன்ன முதல்வர் ஸ்டாலின்..

Sahitya Akademi Award: சாகித்ய அகாடமி விருது என்பது இந்திய மொழிகளில் வெளிவரும் சிறந்த படைப்புகளுக்காக வழங்கப்படும் உயரிய விருதாகும். இது கவிதை, நாவல், சிறுகதை, இலக்கிய ஆய்வு உள்ளிட்ட பல்வேறு இலக்கியப் பிரிவுகளின் அடிப்படையில் ஆண்டுதோறும் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது.. வாழ்த்து சொன்ன முதல்வர் ஸ்டாலின்..

கோப்பு புகைப்படம்

Published: 

16 Mar 2026 18:30 PM

 IST

சென்னை, மார்ச் 16, 2026: மூத்த எழுத்தாளர் சா. தமிழ்செல்வனுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது, “தமிழ் சிறுகதையின் தடங்கள்” என்ற நூலுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வு நூலான இந்த நூல், தமிழ் சிறுகதை இலக்கியத்தின் முதல் 50 ஆண்டுகளின் வரலாற்றையும் அதன் பரிணாம வளர்ச்சியையும் விரிவாக ஆராய்கிறது. கிட்டத்தட்ட 900 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகம், தமிழ் சிறுகதை உலகின் முக்கிய மைல்கற்களை பதிவு செய்துள்ளது. குறிப்பாக 1913 ஆம் ஆண்டு முதல் 1970கள் வரை வெளிவந்த சிறுகதைகளின் போக்கை இந்த நூல் ஆவணப்படுத்தியுள்ளது.

சாகித்ய அகாடமி விருது என்பது இந்திய மொழிகளில் வெளிவரும் சிறந்த படைப்புகளுக்காக வழங்கப்படும் உயரிய விருதாகும். கவிதை, நாவல், சிறுகதை, இலக்கிய ஆய்வு உள்ளிட்ட பல்வேறு இலக்கியப் பிரிவுகளின் அடிப்படையில் ஆண்டுதோறும் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

மேலும் படிக்க: 5 பேரிடம் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிப்பு – விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு – நீதிமன்றத்தில் பரபரப்பு தகவல்

முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து:

தமிழ்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தான் எழுதும் நிலப்பரப்பின் கருப்பொருட்களை எல்லாம் கதையின் ஓட்டத்தில் இயல்பாக பின்னிப் பிணைக்கும் எழுத்தாளர் தோழர் சா. தமிழ்செல்வன் அவர்களுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு எனது பாராட்டுக்கள்.

மேலும் படிக்க: திருவண்ணாமலை: சொத்துத் தகராறில் தாயை தாக்கிய அரசு டாக்டர் கைது

தாமதப்படுத்தினாலும் இறுதியில் சரியான கைகளில் சாகித்ய அகாடமி சேர இருப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். தங்களது படைப்புகள் மேலும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, நம் மண்ணின் கதைகள் அனைவரையும் சென்றடைய என் வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..