பெண் சிசுவை கலைக்க கூறி நிர்பந்தம்.. 1 வயது குழந்தையுடன் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட தாய்!

Woman Killed Herself and 1 Year Old Girl | தனது வயிற்றில் இருந்த பெண் சிசுவை கலைக்க கூறியதால் கடும் மன உலைச்சலுக்கு ஆளான பெண், தானும் தனது ஒரு வயது பெண் குழந்தையுடன் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெண் சிசுவை கலைக்க கூறி நிர்பந்தம்.. 1 வயது குழந்தையுடன் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட தாய்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

26 Jun 2025 09:00 AM

 IST

திருவண்ணாமலை, ஜூன் 26 : வயிற்றில் இருப்பது பெண் சிசு என தெரிந்ததும் கணவரின் குடும்பத்தினர், சிசுவை கலைக்க கூறியதால் கடும் மன உலைச்சலுக்கு ஆளான பெண், கிணற்றில் குதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்கேன் மூலம் வயிற்றில் இருப்பது பெண் குழந்தை என கண்டறியப்பட்ட நிலையில், பெண்ணின் கணவர் குடுமப்த்தினர் கொடுத்த நெருக்கடியின் காரணமாக அந்த பெண் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். தனது மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என அந்த பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், இந்த உண்மை தெரிய வந்துள்ளது.

ஸ்கேன் சென்டர் மூலம்  வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டுபிடித்த குடும்பத்தினர்

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி உமாதேவி (வயது 25). இந்த தம்பதிக்கு ஒரு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில், உமாதேவி மீண்டும் கர்ப்பமாகிய நிலையில், அவர் ஜூன் 24, 2025 அன்று தங்களது குடும்பத்திற்கு சொந்தமான கிணற்றில் தனது மகள் மோகனஸ்ரீ உடன் பினமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உமாதேவி மற்றும் அவரது ஒரு வயது மகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில், தனது மகள் மற்றும் பேரக்குழந்தையின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என்று உமாதேவியின் தந்தை ஏழுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக உமாதேவியின் மாமனார், மாமியார், கணவர் மற்றும் அவரின் நண்பர் என 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

பெண் சிசுவை கலைக்க கூறியதால் தாய் விபரீத முடிவு

விக்னேஷ் – உமாதேவிக்கு ஏற்கனவெ ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், மீண்டும் பெண் குழந்தை வேண்டாம் என்றும் அந்த குழந்தையை கலைக்கவும் குடும்பத்தினர் நிர்பந்தம் செய்து வந்துள்ளனர். இதனால் கடும் மன உலைச்சலுக்கு ஆளான உமாதேவி தனது ஒரு வயது மகளுடன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த விவகராம் தொடர்பாக உமாதேவியின் கணவரின் குடும்பத்தை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us
Related Stories
எரிவாயு தட்டுப்பாடு.. மத்திய மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..
ஈரான் போர் தாக்கம்.. எரிவாயு தட்டுப்பாடு குறித்து பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
ஓ. பன்னீர் செல்வம் மனநிலையில் திடீர் மாற்றம்… வீட்டில் மீண்டும் குடியேறிய ஜெயலலிதா புகைப்படம்!
பசுமை காடுகளுக்கு மத்தியில் “குட்டி குற்றாலம்”.. பட்ஜெட் ட்ரிப்புக்கு ஏற்ற பக்காவான இடம்!
மதுபோதையில் கொடூர தாக்குதல்.. ஆத்திரத்தில் கத்தியை எடுத்த தாய்.. ரத்தம் வெள்ளத்தில் சுருண்டு விழுந்த மகன்.. அடுத்து நடந்த விபரீதம்!
Seeman Tamil Nadu Election: தனித்து களம் காணும் நாதக… காங்கிரஸ் கோட்டையில் களமிறங்கும் சீமான்.. வெற்றியை வசமாக்குவாரா!
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..