AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கணவர் கண்முன்னே துடிதுடித்து உயிரிழந்த மனைவி.. பைக்கில் சென்றபோது விபரீதம்.. குமரியில் சோகம்!

kanyakumari accident : கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை விபத்தில் கணவர் கண்முன்னே மனைவி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்ததில், பெண் ஒருவர் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். இதில், பெண்ணின் கணவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

கணவர் கண்முன்னே துடிதுடித்து உயிரிழந்த மனைவி.. பைக்கில் சென்றபோது விபரீதம்.. குமரியில் சோகம்!
மாதிரிப்படம்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 02 Jun 2025 08:01 AM IST

கன்னியாகுமரி,  ஜூன் 02 : கன்னியாகுமரி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண், பேருந்து சக்கரத்தில் சிக்கிய உயிரிழந்துள்ளார். கணவர் கண் எதிரே பெண் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ் ஸ்டீபன் (46). இவரது மனைவி பிந்து (37). இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. ஜோஸ் ஸ்டீபன் பெயிண்ட் கடையில் வேலை பார்த்து வருகிறார். இதற்கிடையில், பெண் பிந்துவின் உறவினர்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, அவர்களை பார்ப்பதற்காக 2025 ஜூன் 1ஆம் தேதியான நேற்று பிந்துவும், அவரது கணவர் ஜோஸ் ஸ்டீபனும் இருசக்கர வாகனத்தில் களியக்காவிளைக்கு சென்றனர்.

கணவர் கண்முன்னே துடிதுடித்து உயிரிழந்த மனைவி

அங்கு சென்ற அவர், உறவினர்களை சந்தித்து விட்டு, வீடுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இருசக்கர வாகனத்தை ஜோன்ஸ் ஸ்டீபன் ஓட்டி வர, பிந்து பின்பக்கம் அமர்ந்திருந்தார். அப்போது, அவர்கள் தக்கலை அருகே சென்றுக் கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனம் திடீரென நிலைதடுமாறி இருக்கிறது.

இதில், இருசக்கர வாகனத்தில் இருந்த ஜோன்ஸ் ஸ்டீபன் மற்றும் பிந்துவும் கீழே விழுந்துள்ளனர். அப்போது, இவர்களுக்கு எதிரே வந்த பேருந்தின் பின் சக்கரம் பிந்து மீறி ஏறி இருக்கிறார். இதில் படுகாயம் அடைந்த பிந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் மற்றும் கணவர் ஜோன்ஸ் உடனே தக்கலை மருத்துவமனையில் சிகிச்சைக்கா அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த விபத்தில் ஜோன்ஸ் ஸ்டீபன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

குமரியில் சோகம்

அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்து வருகின்றனர். மேலும், பிந்துவின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பினர். கணவர் கண்முன்னே மனைவி பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, 2025 மே 25ஆம் தேதி, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சாலை விபத்தில்உ யிரிழந்தனர். மதுரை தேனி சாலையை கடக்க முயன்றபோது, கார் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயம் அடைந்தனர். கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, இந்த விபத்து நடந்துள்ளது. இந்த கோர விபத்தில் கோவில்பட்டியைச் ர்ந்த பாண்டிச் செல்வி (28), லட்சுமி (55), ஜோதிகா (20), குழந்தை பிரகலாதன் (3) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Follow Us