வீட்டில் தனியாக இருந்த தாய், மகள்.. கழுத்தறுத்து கொன்ற கொடூரம்.. அதிர்ந்த கிருஷ்ணகிரி

Krishnagiri Double Murder : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தாய், மகள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் தனியாக இருந்த அவர்களை, கழுத்தறுத்து கும்பல் கொடூரமாக கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டில் தனியாக இருந்த தாய், மகள்.. கழுத்தறுத்து கொன்ற கொடூரம்.. அதிர்ந்த கிருஷ்ணகிரி

மாதிரிப்படம்

Updated On: 

27 Sep 2025 12:28 PM

 IST

கரூர், செப்டம்பர் 27 : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியாக வீட்டில் இருந்த தாய், மகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் எல்லம்மாள் (50) மற்றும் அவரது மகள் சுகிதா (13) என அடையாளம் காணப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி தாலுகா, பஞ்சலியூர் அருகே உள்ள யாசின் பகுதியைச் சேர்ந்தவர் எல்லம்மாள் (50). இவரது மகள் சுகிதா (13). இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால், வீட்டில் எல்லம்மாள் மற்றும் அவரது மகள் சுசிதா வசித்து வந்துள்ளனர். எல்லம்மாள் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலை செய்து வந்தார். மேலும், சிறுமி சுகிதா அதே பகுதியில் அரசுப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். 2025 செப்டம்பர் 26ஆம் தேதியான நேற்று பள்ளி முடிந்து, சிறுமி சுகிதா வீட்டிற்கு வந்துள்ளார்.

இதனால், தாய் எல்லம்மாள் மற்றும் சுசிதா வீட்டில் தனியாக இருந்துள்ளனர். அப்போது, வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் எல்லம்மாள் மற்றும் சிறுமி சுகிதாவை கழுத்தறுத்து கொலை செய்துள்ளனர். இதனால், வீட்டில் ரத்த வெள்ளத்திலேயே சிகிதா மற்றும் எல்லம்மாள் கிடந்தனர். இந்த நிலையில், 2025 செப்டம்பர் 26ஆம் தேதியான நேற்று இரவு எல்லம்மாளின் தம்பி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, எல்லம்மாள் மற்றும் அவரது மகள் சுகிதா ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

Also Read : பெற்றோர் உஷார்.. பால் குடிக்கும்போது மூச்சுத்திணறல்.. பறிபோன பிஞ்சு உயிர்!

கிருஷ்ணகிரியில் இரட்டை கொலை

இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை அனுப்பினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், வீட்டில் நகை, பணம் எதுவும் கொள்ளையடிக்கப்படவில்லை எனவும் , தொழிலில் ஏற்பட்ட முன்விரோதத்தில் இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகின்றனர். காவல் கண்காணிப்பாளர் பி. தங்கதுரை குற்றம் நடந்த இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

Also Read : 9 மணி நேரம் தான் டிராவல்.. சென்னை டூ ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயில்.. எப்போது தெரியுமா?

எல்லம்மாளின் கணவர் சுரேஷ் 2018 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார். இவருக்கு மற்றொரு மகள் விபத்தில் உயிரிழந்தார். இதனால், எல்லம்மாள் தனது 16 வயது மகள் மற்றும் மகனுடன் வசித்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. கொலை நடந்தபோது, மகன் வீட்டில் இல்லாததால் உயிர் தப்பியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.