நாளை இந்த 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Heavy Rain Alert : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதன் அருகிலுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில்  உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், டிசம்பர் 3, 2025 அதிகாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுவிழந்துள்ளது இது அடுத்த 24 மணிநேரத்தில் மேலும் பலவீனமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை இந்த 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

மாதிரி புகைப்படம்

Published: 

03 Dec 2025 16:19 PM

 IST

சென்னை, டிசம்பர் 3: தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாள்களாக தொடர்ந்து கனமழை (Heavy Rain) பெய்து வரும் நிலையில், மேலும் ஒரு முக்கிய அறிவிப்பை சென்னை (Chennai) வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. குறிப்பாக சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் டிசம்பர் 3, 2025 அன்று கன முதல் மிக கனமழை பெய்யும் எனவும், டிசம்பர் 4, 2025 அன்று வியாழக்கிழமை தென் மாவட்டங்களில் கனமழை பொழிய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதன் அருகிலுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில்  உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், டிசம்பர் 3, 2025 அதிகாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுவிழந்துள்ளது இது அடுத்த 24 மணிநேரத்தில் மேலும் பலவீனமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதாலும் பல மாவட்டங்களில் மழை பெய்யும் நிலை உருவாகியுள்ளது. இதனையடுத்து டிசம்பர் 3, 2025 அன்று தமிழகத்தில் பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வும் அறிவித்துள்ளது. அதன் படி, நீலகிரி,  கோயம்புத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை ஆகிய இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதையும் படிக்க : வலுவிழக்கும் தித்வா புயல்: இந்த மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!!

கனமழை வாய்ப்புள்ள மற்ற மாவட்டங்கள்

மேலும் டிசம்பர் 3. 2025 அன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை இந்த 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின் படி, டிசம்பர் 4, 2025 அன்று நாளை கிருஷ்ணகிரி, தருமபுரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி தமிழகத்தின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பும் உள்ளது, சென்னையைப் பொறுத்தவரை டிசம்பர் 3, 2025 அன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் சில பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வெப்ப நிலை 24 முல் 26 டிகிரி செல்சியஸ் வரை நிலவும் என கூறப்பட்டுள்ளது. டிசம்பர் 4, 2025 அன்று சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்லது.

இதையும் படிக்க : வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. தொடரும் கனமழை.. தத்தளிக்கும் சென்னை!

தமிழக கடலோர பகுதிகள் குறிப்பாக மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதியில், மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் இதனால் மீனவர்கள் டிசம்பர் 3, 2025 இன்று ஒரு நாள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மீண்டும் இணையும் பேட்ட காம்போ! - ஜெயிலர் 2 படத்தில் விஜய் சேதுபதி?
பிரணவ் மோகன்லாலின் டைஸ் ஐரே - ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிப்பு
இலங்கை, இந்தோனேசியாவை தாக்கிய இரட்டை புயல்கள் - 350க்கும் மேற்பட்டோர் பலி
முதல்நாளே வசூலை குவித்த ‘தேரே இஷ்க் மே’.. இந்தியில் சாம்ராஜ்யம் படைக்கும் தனுஷ்!!