தவெகவின் வேட்பாளர் அறிமுகம் இன்று முதல் தொடக்கம்? பரபரக்கும் அரசியல் களம்!!

2026 சட்டமன்ற தேர்தலில் தவெக முதல் முறையாக போட்டியிட உள்ளது. இதையொட்டி, தேர்தலுக்கான பணிகளில் அக்கட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தற்போது கூட்டணி குறித்து எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் உள்ள அக்கட்சி, வேட்பாளர்களை இறுதி செய்வதை முதன்மை பணியாக மேற்கொண்டு வருகிறது.

தவெகவின் வேட்பாளர் அறிமுகம் இன்று முதல் தொடக்கம்? பரபரக்கும் அரசியல் களம்!!

தவெக தலைவர் விஜய்

Updated On: 

14 Dec 2025 09:50 AM

 IST

வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை இன்று முதல் தவெக அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தவகையில், திருச்செங்கோட்டில் இன்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், செங்கோட்டையன், அருண்ராஜ் பங்கேற்கும் நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்ட வேட்பாளர்களை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, மாவட்ட வாரியாக கூட்டங்களை நடத்தி வேட்பாளர்களை அறிமுகப்படுத்த உள்ளதாகவும், இதையொட்டி மாவட்ட வாரியாக பிரமுகர்களை இணைக்கும் பணியும் தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை தேர்வு செய்வதும், கூட்டணியை இறுதி செய்வதுமாக பரபரப்பாக இயங்கி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தவெக இன்று பொதுமக்களுக்கு அல்லாமல் கட்சி நிர்வாகிகளுக்கு மட்டும் வேட்பாளர் விவரத்தை அறிவிக்க உள்ளதாக தெரிகிறது.

மேலும் படிக்க: அதிமுக பாஜக தொகுதி பங்கீடு.. இத்தனை தொகுதிகளா? ஷாக்கான அதிமுக தலைமையகம்..

234 தொகுதிக்கும் உத்தேச வேட்பாளர் தயார்:

அந்தவகையில், 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக முதல் முறையாக போட்டியிட உள்ளது. இதையொட்டி, தேர்தலுக்கான பணிகளில் அக்கட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தற்போது கூட்டணி குறித்து எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் உள்ள அக்கட்சி, வேட்பாளர்களை இறுதி செய்வதை முதன்மை பணியாக மேற்கொண்டு வருகிறது. சட்டமன்ற தேர்தல் தான் தங்களது ஒரே இலக்கு என்று அறிவித்த விஜய், அதைநோக்கி மும்முரமாக செயல்பட்டு வருகிறார். இதற்காக ஏற்கெனேவ, அவர் வேட்பாளர் வைத்து 234 தொகுதிக்கும் உத்தேச வேட்பாளர்களை தயார் செய்து வைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிர்வாகிகளுக்கு வேட்பாளர் அறிமுகம்:

வேட்பாளர் யார் என்று கட்சியினருக்கு அடையாளம் காட்டினால் தான், வீதி வீதியாக பிரசாரம் மேற்கொள்ள ஏதுவாக இருக்கும், வாக்களர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் வேட்பாளர்களுக்கு கிடைக்கும் என்பதை மனதில் வைத்து விஜய் இந்த முடிவு எடுத்ததாக சொல்லப்படுகிறது. மற்ற கட்சிகள் விருப்ப மனு பெற தொடங்க உள்ள நிலையில், தவெகவில் சில தொகுதிகளுக்கு இன்று வேட்பாளர்களே அறிமுகம் செய்ய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அக்கட்சியினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நாமக்கல் மாவட்ட வேட்பாளர்கள் இன்று அறிமுகம்?

இந்நிலையில், குறிப்பிட்ட சில தொகுதிகளுக்கு மட்டும் தொகுதி நிர்வாகிகள் மத்தியில் வேட்பாளர்களை இன்று முதல் அறிமுகம் செய்ய விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில், அக்கட்சியின் பொதுசெயலாளர் ஆனந்த் மற்றும் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், கொள்கை பரப்பு பொது செயலாளர் அருண்ராஜ் ஆகியோர் பங்கேற்கின்றனர். நாமக்கலில் நடைபெறும் நிகழ்சியில் இன்று சில தொகுதிகளுக்கான வேட்பாளர் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

பாகிஸ்தான் திருமணத்தில் துரந்தர் பட பாடல்.... வீடியோ வைரல்
ஆதார் கார்டு நகல்களுக்கு வருகிறது தடை.. விரைவில் அறிமுகமாகும் புதிய விதிகள்!
ரயில்களில் இருக்கும் மஞ்சள், வெள்ளைக் கோடுகளின் அர்த்தம் என்ன தெரியுமா?
YouTube பார்த்து சிகிச்சை செய்து இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி; போலி டாக்டர் கைது