தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி? விஜய் அதிகாரபூர்வ அறிவிப்பு
TVK Vijay : சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையனுக்கு (Sengottaiyan) மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்படுவதாக விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கூடுதலாக அவருக்கு மேற்கு மாவட்ட அமைப்பு செயலாளராகவும் அவர் செயல்படுவார் எனவும் விஜய் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

விஜய் - செங்கோட்டையன்
சென்னை, நவம்பர் 27: சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையனுக்கு (Sengottaiyan) மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்படுவதாக விஜய் (Vijay) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் நவம்பர் 27, 2025 அன்று இணைந்தார். அவருக்கு தவெகவில் என்ன பதவி வழங்கப்படும் என்பது கேள்விக்குறியாக இருந்து வந்தது. இந்த நிலையில் தான் செங்கோட்டையனுக்கு மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுவதாக விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
செங்கோட்டையனுக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி
அதிமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் இணையவுள்ளதாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் நவம்பர் 26, 2025 அன்று பட்டினப்பாக்கத்தில் உள்ள தவெக தலைவர் விஜய்யின் வீட்டில் அவரை சந்தித்து 2 மணி நேரத்துக்கு மேலாக செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தினார். முன்னதாக அவர் தனது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்தார்.
இதையும் படிக்க : “செங்கோட்டையன் பின்னால் பாஜக இல்லை”.. நயினார் நாகேந்திரன் பளீர்!
இந்த நிலையில் தான் அவர் தனது ஆதரவாளர்களுடன் விஜய் முன்னிலையில் நவம்பர் 27, 2025 அன்று தவெகவில் செங்கோட்டையன் இணைந்தார். அவர் செல்வாக்கு மிகுந்த தலைவர் என்பதால் அவருக்கு தவெகவில் என்ன பதவி கொடுக்கப்படும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்த நிலையில் அவருக்கு கட்சியின் மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்படுவதாக தனது எக்ஸ் பக்கத்தில் விஜய் அறிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய்யின் பதிவு
— TVK Vijay (@TVKVijayHQ) November 27, 2025
இதுதொடர்பாக அவர் தனது அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, அண்ணன் செங்கோட்டையன் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 28 பேர் கொண்ட, எனது கண்காணிப்பில் இயங்கும் கழக உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகிறார். இவர் இக்குழுவை வழிநடத்தி, கழகத்தின் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுக்க எனக்கு உறுதுணையாகச் செயல்படுவார்.
மேலும் கூடுதலாக, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளராகவும் நியமிக்கப்படுகிறார். என்னோடும் கழகப் பொதுச் செயலாளர் என்.ஆனந்துடனும் கலந்தாலோசித்து கழகப் பணிகளை, மேற்கண்ட இம்மாவட்டங்களில் மேற்கொள்வார்.
இதையும் படிக்க : விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்.. பரபரக்கும் பனையூர்!!
மேலும், அவருடன் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சத்தியபாமா, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் வெங்கடாசலம், முத்துக்கிருஷ்ணன் மற்றும் பிற புதிய உறுப்பினர்களையும் வாழ்த்தி வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கழகத் தோழர்களும் நிர்வாகிகளும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.