அமெரிக்காவின் வரிவிதிப்பு …. தமிழ்நாட்டில் கடல் உணவு உற்பத்தி 50% பாதிப்பு
US Tariff Impact : இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அரசு 50 சதவிகிதம் வரிவிதித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் கடல் உணவுகள் உற்பத்தி கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக தூத்துக்குடியில் 50 சதவிகிதம் கடல் உணவு உற்பத்தி குறைந்துள்ளதாக ஏற்றுமதி நிறுவனங்கள் கவலை தெரிவிக்கின்றன.

அமெரிக்க வரியால் கடல் உணவு உற்பத்தி பாதிப்பு
அமெரிக்க (America)அரசு இந்தியாவில் இருந்து கடல் உணவு இறக்குமதிக்கு கடுமையான வரிகளை விதித்ததை தொடர்ந்து, தமிழ்நாட்டில் கடல் உணவு நிறுவனங்கள் உற்பத்தியை 50 சதவிகிதம் குறைத்துள்ளன. அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பின் படி, 50 சதவிகிதம் அடிப்படை வரி, 5.77 கூடுதல் வரி சேர்த்து விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடன் உணவு நிறுவனங்கள் விலையை எப்படி கணக்கிடுவது? ஏற்றுமதி எப்படி செய்வது ? என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள். இதனால் கடல் உணவுகள் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுகின்றன. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது. இதனால் இந்தியாவின் வாடிக்கையாளர்களும் பாதிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 25 கடல் உணவு ஏற்றுமதி நிறுவனங்களில், தூத்துக்குடியில் மட்டும் 15 நிறுவனங்கள் இயங்குகின்றன.
மீனவர்களிடம் இருந்து கடல் உணவுகளை பெற்று, துறைமுகம் மூலம் அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன். ஏற்றுமதி செய்யப்படும் கடல் உணணவுகளில் இறால், மீன்கள், ஆக்டோபஸ் ஆகியவை அடங்கும்.
இதையும் படிக்க : திருப்பூர் டூ ஐடி துறை .. அமெரிக்காவின் 50 சதவீத வரி.. இந்தியாவுக்கு இவ்வளவு பாதிப்பா?
கடல் உணவுகள் ஏற்றுமதியில் பாதிப்பு
இது தொடர்பாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனத்துக்கு ஏற்றுமதி நிறுவனர் அளித்த பேட்டியில், எங்கள் நிறுவனத்தில் இருந்து கடல் உணவுகளில் 60 சதவிகிதம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மீதமுள்ள கடல் உணவுகள், சீனா, ஜப்பான், கனடா போன்ற நாடுகளு்கக்கு செல்கிறது. அமெரிக்காவிற்கு கடல் உணவுகள் செல்ல 45 நாட்கள் வரை ஆகும்
இந்த நிலையில் அமெரிக்க அரசின் புதிய வரிவிதிப்பால் ஏற்றுமதியாளர்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக முன்பைக் காட்டிலும் போக்குவரத்து சிக்கலும் அதிகரித்திருக்கிறது. முன்பு மாதம் 50 கண்டெயினர்கள் வரை ஏற்றுமதி செய்யப்டும். அதில் 20 கண்டெயினர்கள் அமெரிக்காவுக்கு செல்லும். தற்போது இந்த எண்ணிக்கை குறைந்து வருகிறது என்றார்.
இதையும் படிக்க : அதிபர் டிரம்பின் வரி விதிப்பு.. அமெரிக்காவிற்கான தபால் சேவையை நிறுத்திய இந்தியா..
பங்கு சந்தை சரிவை சந்திக்கும் அபாயம்?
கடந்த 2023 முதல் 2024 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் 17.81 லட்சம் டன் கடல் உணவுகளை ஏற்றுமதி செய்துள்ளது. இதன் மதிப்பு ரூ.60,523 கோடி என்று கூறப்படுகிறது. அதில் இறால் மட்டும் 40.19 சதவிகிதம் ஏற்றுமதி செய்யப்பட்து. இதில் இருந்து கிடைக்கும் லாபம் மட்டும் 66 சதவிகிதம் வரை கிடைத்து வந்தது. அமெரிக்கா மட்டும் 3.29 லட்சம் கடல் உணவு களை வாங்கியது. இதில் தமிழ்நாட்டின் பங்கு 89,001 டன். இது இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 5 சதவிகிதமாகும்.
இது குறித்து கடல் உணவுகள் ஏற்றுமதி சங்கத்தின் தமிழக தலைவர் செல்வின் பிரபு பேசியதாவது, இந்தோனேசியா போன்ற நாடுகள் 15 சதவிகிதம் மற்றும் 19 சதவிகிதம் வரி ஏற்றுமதி செய்யும் நிலையில் இந்தியாவின் மார்க்கெட் சரிவை சந்திக்கும். இதனால் தொழிலாளர்கள் வேலை இழப்பை எதிர்கொள்வார்கள். அரசு உரிய நடவடிக்கை எடுத்து கடல் உணவுகள் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.