திருவள்ளூரில் இருவர் கொடூர கொலை…கஞ்சா போதையில் 4 பேர் வெறிச்செயல்…போலீசார் போட்ட மாவுக்கட்டு!

Tiruvallur Two Youth Murder : திருவள்ளூர் மாவட்டத்தில் நடு ரோட்டில் இரு இளைஞர்களை கஞ்சா போதையில் இருந்த 4 பேர் கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்தனர். இதில், 4 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் .

திருவள்ளூரில் இருவர் கொடூர கொலை...கஞ்சா போதையில் 4 பேர் வெறிச்செயல்...போலீசார் போட்ட மாவுக்கட்டு!

திருவள்ளூரில் இருவர் கொடூரமாக அடித்து கொலை

Published: 

17 Jan 2026 17:24 PM

 IST

திருவள்ளூர் மாவட்டம், மணவாள நகர் ஒட்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன். தனியார் வங்கியில் பணிபுரிந்து வரும் இவர், பொங்கல் பண்டிகை விடுமுறையை கொண்டாடுவதற்காக தனது நண்பர்களான சுகுமார் மற்றும் கேசவன் ஆகியோருடன் ஆந்திராவுக்கு இரு சக்கர வாகனத்தில் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு, பல்வேறு இடங்களை சுற்றி பார்த்துவிட்டு மூன்று பேரும் தங்களது பைக்கில் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, நேற்று வெள்ளிக்கிழமை ( ஜனவரி 16) இரவு மணவாள நகர் ஒட்டிக்குப்பம் பழைய பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, சாலையில் 4 இளைஞர்கள் ரகளை செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, பார்த்திபன் ஆகியோர் வந்த பைக்கை மறித்து அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில், கஞ்சா போதையில் இருந்த அந்த 4 இளைஞர்களுக்கும், பார்த்திபன் மற்றும் அவரது நண்பர்களுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது.

ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த தனியார் வங்கி ஊழியர்

இதில், பார்த்திபன் உள்ளிட்ட 3 பேரை கஞ்சா போதையில் இருந்த 4 இளைஞர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், பார்த்திபன் உள்ளிட்ட 3 பேரும் சாலையில் விழுந்துள்ளனர். உடனே, அவர்களின் மீது அருகில் கிடந்த சிமெண்ட் ஸ்லாப்பை எடுத்து போட்டுள்ளனர். இதில், பார்த்திபன் தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடிக்க துடிக்க பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கேசவன் மற்றும் சுகுமார் ஆகியோர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். உடனே அந்த வழியாக சென்றவர்கள் அந்த இரு நபர்களையும் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க: சென்னையில் இளைஞர் வெட்டிக் கொலை.. காதலிகளே அரங்கேற்றிய கொடூரம்.. திடுக் சம்பவம்!!

தீவிர சிகிச்சை பிரிவில் உயிரிழந்த மற்றொரு இளைஞர்

அங்கு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சுகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். கேசவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக மணவாள நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், மணவாள நகரைச் சேர்ந்த வினோத் குமார், ஜவகர், நீலகண்டன், ஜோதீஸ் ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, அவர்களை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

போலீசார் விசாரணையில் கை-கால் முறிவு

முன்னதாக, போலீசார் மேற்கொண்ட விசாரணையின் போது, தவறி விழுந்ததில் ஜவஹருக்கு கையிலும், நீலகண்டனுக்கு காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வினோத்குமார் மற்றும் ஜோதீஸ் ஆகியோருக்கு உடலில் லேசான காயங்கள் ஏற்பட்டதாகவும், இதற்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த கொலை சம்பவம் தொடர்பாக வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்க: கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி…கோவையில் 1,200 பண்ணைகளுக்கு செக்!

‘கழுத்தை அறுத்த சீன மாஞ்சா கயிறு’.. உயிர்தப்பிய மதபோதகர்..
51 ஆண்டுகளுக்கு முன் நடந்த திருட்டு சம்பவம்.. விடுதலை செய்யப்பட்ட நபர்..
பணம் பற்றாக்குறை காரணமாக காப்பீட்டு பிரீமியம் செலுத்த முடியாமல் தவிக்கிறீர்களா? இதை செய்தால் போதும்..
"சொமேட்டோவில் நடக்கும் மோசடி சம்பவங்களை பகிர்ந்த சிஇஓ".. எச்சரிக்கை மக்களே!!