விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்.. துடிதுடித்து பறிபோன இரு உயிர்.. சென்னையில் சோகம்!
Chennai Ganesh Chaturthi Celebrations : சென்னையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தபோது, மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மின்சாரம் பாய்ந்து இளைஞர்கள் 2 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாதிரிப்படம்
சென்னை, ஆகஸ்ட் 26 : சென்னையில் மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உயிரிழந்தது (Ganesh Chaturthi) பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்காக பந்தல் அமைக்கும்போது, மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் 2025 ஆகஸ்ட் 27ஆம் தேதி (நாளை) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் வட மாநிலங்கள் மற்றும் தென் மாநிலங்களில் கோலாகலமாக கொண்டாடப்படும். இதற்கான ஏற்பாடுகள் கடந்த சில நாட்களாகவே செய்து வருகின்றனர். விநாயகர் சதுர்த்தியையொட்டி, தெருக்களில் விநாயகர் சிலை அமைத்து கொண்டாடுவார்கள். அந்த வகையில், தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். இதற்காக ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
பந்தல் அமைத்து, விநாயகர் சிலையை வைப்பது, மின் விளக்குகள் வைப்பது போன்ற பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் தான், சென்னையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தபோது, மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்தவர் பரத் (28). இவர் நண்பர்களுடன் கோயிலுக்கு வெளியே பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அதாவது, பூந்தமல்லி பிராடிஸ் சாலையில் தூம கேது விநாயகர் கோயில் உள்ளது.
Also Read : விநாயகர் சதுர்த்தி விடுமுறை.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. எங்கெல்லாம் தெரியுமா?
இந்த கோயிலில் விநாயகர் சதுர்த்திக்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தது. மின் விளக்குகள், ஒலிபெருக்கி அமைக்கும் பணிகள் முடிந்த நிலையில், கோயிலுக்கு முன் பந்தம் அமைக்கும் பணிகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது, இந்த பணியில் ஈடுபட்டிருந்த பரத் மற்றும் அவரது நண்பர்களை மின்சாரம் தாக்கியது.
மின்சாரம் தாக்கி இருவர் பலி
கம்பம் அமைக்கும் போது, மின் கம்பியில் உரசி மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் நாக்கு பேரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இளைஞர் பரத் உயிரிழந்தார்.
மேலும், சென்னை செங்குன்றம் பகுதியில் உள்ள அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பிரசாத் (24). இவர் பந்தம்போடும் வேலை செய்து வந்தார். இதனால், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு பந்தல் போடுவதற்காக மாதவரத்திற்கு சென்றிருந்தார். அப்போது, ராஜாஜி தெருவில் விநாயகர் சிலை வைக்க பந்தல் போட்டுக் கொண்டிருந்தார்.
Also Read : மிரண்ட சென்னை விமான நிலையம்.. ரூ.20 கோடி போதைப்பொருளுடன் வந்த பெண்!
அப்போது, மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டனர். உடகே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீது கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கான பணிகளின்போது, மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.